ஆடற்கலையின் இலக்கணம் உரைக்கும்
நூற்கள் பல.
அவற்றைப் பற்றிச் சிலப்பதிகார உரை மூலமும் பிற இலக்கிய
உரை நூல்கள் வாயிலாகவும் அறிகிறோம்.
அகத்தியர் இயற்றிய அகத்தியம்
என்ற நூல் இயல்,
இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும்
ஒரே நூலாக
இருந்துள்ளது. நச்சினார்க்கினியர் காலத்திற்கு முன்பே
அது
மறைந்துவிட்டது.
சயந்தம்
என்ற நாடகத் தமிழ் நூல் சயந்தனரால்
இயற்றப்பட்டது. இதுவும் கிடைக்கவில்லை.
செயிற்றியர் இயற்றிய
நூல் செயிற்றியம்.
இது
ஆடலுக்குரிய அவிநயம் பற்றி உரைக்கும் நூல்.
இதுவும்
12-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு மறைந்துவிட்டது.
மதிவாணர்
நாடகத்தமிழ் நூல் பாண்டிய மன்னன்
மதிவாணரால் இயற்றப்பட்டது. அடியார்க்கு நல்லார் காலத்தில்
இருந்துள்ளது. சிலப்பதிகார உரை எழுத இந்நூல் உதவியுள்ளது.
இவ்வாறு ஆடல் இலக்கணம்
உரைக்கும் நூற்கள் பல
இருந்துள்ளன. இன்று கிடைக்கும் நூற்களில்
கூத்தநூல்,
பஞ்சமரபு, மகாபரத சூடாமணி என்ற
மூன்று ஆடல்
இலக்கண நூற்கள் பற்றிப் பார்ப்போம். ஆடல் இலக்கியமாகவும்
அதே நேரத்தில் ஆடல் இலக்கணம் உரைக்கும் நூலாகவும்
விளங்கும் சிலப்பதிகாரத்தில்
காணப்படும் ஆடல் இலக்கணம்
பற்றியும் இப்பாடப் பகுதியில் காண்போம்.
|