மகாபரத சூடாமணி ஆடல்
இசை இலக்கண நூலாகும்.
இந்நூல் மகாபரத சூடாமணி என்னும் நவராக
தாள
சிங்காராதி என்ற பெயரால் அழைக்கப்பட்டுள்ளது.
இந்நூலாசிரியர் பெயர் பற்றி விவரம் தெரியவில்லை. கடவுள்
வாழ்த்தில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரை வணங்குவதாலும்,
பாண்டிய மன்னனைப் பற்றிக் குறிப்பிடுவதாலும் இவர் பாண்டிய
நாட்டைச் சார்ந்தவராகக் கருத இடமுளது. மேலும் நட்டுவக்
கலையிலும் இசைக்கலையிலும் மிகுந்த தேர்ச்சி
உடையவராகவும், வடமொழி அறிவும் தமிழ்மொழி அறிவும்
நன்கு நிரம்பியவராகவும் விளங்குகிறார். நாகசுரக் கலையைப்
பற்றி உரைப்பதால் இக்கலையிலும் மிகவும் தேர்ச்சி
உடையவராகக் கொள்ள வாய்ப்புள்ளது. தம் காலத்தின்
நிலையை, இசை, ஆடற்கலை பற்றிய நூல்களை
நன்கறிந்தவராகவும், இசைக்கலை நாடகக் கலை வல்லுநராகவும்
சிறந்த கலைஞராகவும் விளங்குகிறார். சாரங்க தேவர் சோமராய
மன்னன் பொருட்டு இயற்றியது மகாபரதம் என்னும் வடமொழி
நூல். அதனை ஒட்டித் தமிழில் மகாபரத சூடாமணி
எழுதப்பட்டது என்பர்.
6.3.1 நூலமைப்பு
இந்நூல் ஐந்து இயல்களைக் கொண்டதாக அமைந்து
காணப்படுகிறது.
-
நாட்டியோபயோக அவயவபேத விநியோக லட்சணம்
-
முகூர்த்தாதி எழுவகைத் தோற்ற அபிநய லட்சணம்
-
சபாநாயகாதி சர்வவாக்கிய பாத்திர லட்சணம்
-
சங்கீதாதி ராகமேள லட்சணம்
-
தாளாதி மந்திர கணித லட்சணம்
இதில் ஐந்தாவது இயல் ஆகிய தாளாதி மந்திர லட்சணப்பகுதி
கிடைக்கப் பெறவில்லை. இது கிடைத்திருந்தால்
தாளம்
பற்றிய முழுமையான இலக்கண நூலைப் பற்றி
அறியும்
வாய்ப்பினைப் பெற்றிருப்போம். ஏனைய நான்கு பகுதிகளில்
சங்கீதாதி ராகமேள லட்சணம் என்ற இசை இலக்கணப் பகுதி
தனி நூலாக டாக்டர் உ.வே.சா. நூலகத்தின் மூலம் 1955-ஆம்
ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏனைய மூன்று
பகுதிகளையும் கொண்ட நூலாக மகாபரத
சூடாமணி
என்னும் தாள சிங்கராதி என்ற நூலை, உ.வே. சாமிநாதையர்
நூல் நிலையம் 1955-இல் ருக்மணி
தேவி அவர்களின்
அணிந்துரையோடு வெளியிட்டுள்ளது.
· முதல்இயல்
முதலாவது இயலான நாட்டியோபயோக
அவயவபேத
விநியோக லட்சணம் என்ற முதலாவது இயல் 22 பகுதிகளையும்
10 செய்யுட்களையும் கொண்டுள்ளது.
கடவுள் வாழ்த்து, அவையடக்கம்,
நூலக வரலாறு,
பாயிரம், நாட்டிய விவரம், அவிநயவிவரம், விருத்தி,
நாடகம்,
நிருத்தம், நிருத்தம் பற்றிய செய்திகள், தாண்டவம், இலாசியம்,
வெகுவான அவிநயம், அற்பமான அவிநயம், திரியாங்கம்
பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
தலை அசைவு, கண் அசைவு,
புருவ அசைவு, மூக்கு
நிலை, உதட்டுஅமைப்பு, முக அமைப்பு, கண்டபேதம்,
பாதநிலை, மார்புநிலை, வயிறு நிலை, இடுப்பு நிலை, ஒற்றைக்
கை முத்திரை, இரட்டைக் கை முத்திரை, நிர்த்த
அத்தம்,
முத்திரை அத்தம், ஒன்பான் சுவை
போன்றன இடம்
பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் ஆங்கிக
அவிநயம்
பற்றியனவாக அமைந்துள்ளன இவை பற்றிய செய்திகளை
ஆடலுக்கான ஏனைய நூல்களிலும் பார்த்துள்ளோம்.
ஆடல் வேறுபாடு இரு வகைப்படும்.
(1) சித்த விருத்தி (2) பாவிய விருத்தி
சித்தவிருத்தி இயல்பானது.
இது ஒன்றின் சுவைகளை
முகத்தில் காட்டுவது.
பொருள்களை எல்லாம்
திருத்தமான சொற்களால்
கூறுவது பாவிய விருத்தியாகும். இதனை வாசிக
அவிநயம்
என்பர்.
· இரண்டாவது இயல்
எழுவகைத் தோற்றம் அவிநய லட்சணமாகும்.
இவ்வியல்
காலங்களைப் பற்றியும் அவற்றிற்கான அவிநய முத்திரைகள்
பற்றியும் குறிப்பிடுகின்றது. உலகப் படைப்பினை எழுவகையாகப்
பிரித்து அவற்றில் இப்பரத கண்டத்தில்
காணக்கூடிய
வகைகளைக் கூறுகின்றது.
-
இயற்கை வளங்கள்
-
நீர்வாழ் உயிரினங்கள்
-
ஊர்ந்து செல்லும் உயிரினங்கள்
-
பறவைகள்
-
விலங்குகள்
-
மனிதர்கள்
-
தேவர்கள்
· மூன்றாவது இயல்
மூன்றாவது இயலில் அரங்க
அமைப்பு, பாத்திரப்
பண்புகள் போன்றன விளக்கப்பட்டுள்ளன.
இதில் 214
செய்யுட்கள் உள்ளன.
இம்மூன்றாவது இயலில் ஆடலரங்கு பற்றிய செய்திகள்
இடம் பெற்றுள்ளன. நன்றாக அலங்காரம் செய்யப் பெற்ற
ஆடலரங்கில் பவளம், முத்து, வயிரம், மாணிக்கம் பதித்த
சிங்காதனத்தை அமைக்கும் முறையும், மண்டப
அளவு,
அதனைத் தூய்மைப்படுத்தும் முறையும் கூறப்பட்டுள்ளன. |