1.5 கட்டுமானக் கோயில்களும் சிற்பங்களும் |
கட்டுமானக் கோயில்கள் என்பவை கற்களை அடுக்கி
வைத்துக் கட்டப்படும்
கோயில்களாகும். பல்லவ
மரபில் முதன் முதலாகக் கட்டுமானக் கோயில்களையும் அவற்றில்
கற்சிற்பங்களையும்
உருவாக்கியவன் இராச
சிம்மன். (கி.பி. 700 -
728) இவனது படைப்புகளில் புகழ் பெற்றவையாக விளங்குவன
மகாபலிபுரம் கடற்கரைக் கோயிலும், காஞ்சி கைலாச நாதர்
கோயிலும் ஆகும்.
1.5.1 கடற்கரைக் கோயில் சிற்பங்கள் |
மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில் மூன்று
கோயில்களின் தொகுப்பு ஆகும். இதில் கிழக்கு நோக்கியுள்ள
கோயில் கருவறையின் பின் சுவரில் சோமாஸ்கந்தர் புடைப்புச்
சிற்பமும், கருவறையின் நடுவில் சிவ லிங்கமும் காணப்படுகின்றன.
இதன் விமானத்தில் பூத கணங்கள் காணப்படுகின்றன. இந்தக்
கோயிலின் பெயர் சத்திரிய
சிம்மப் பல்லவேசுவரக் கிருஹம்
என்பதாகும்.
கடற்கரைக் கோயில், மகாபலிபுரம் |
மேற்கு நோக்கிய கோயில் கருவறையின் பின் சுவரில்
சோமாஸ்கந்தர் புடைப்புருவம் மட்டும் இடம் பெறுகிறது.
இக்கோயிலின் பெயர் இராச சிம்மப் பல்லவேசுவரக் கிருஹம்
என்பதாகும்.
கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிய கோயில்களுக்கு இடையே
உள்ள
கோயில் நரபதி சிம்ம பல்லவ விஷ்ணுக் கிருஹம்
எனப்படும். இதன் கருவறையில் திருமால்
பள்ளி கொண்ட
பெருமாளாகக் காட்சி தருகிறார்.
கடற்கரைக் கோயிலும் அதன் கண் உள்ள சிற்பங்களும்தாம்
தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்ட முதல் கட்டுமானக் கோயிலும்,
தனி்ச் சிற்பங்களும் ஆகும்.
|