தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(3) | சோழர் சிற்பங்களின் பொதுத் தன்மைகள் சிலவற்றைக் கூறுக. |
சோழர் சிற்பங்கள் உயரமான மகுடம் கொண்டிருக்கும். மெல்லிய உடலமைப்பு, தடித்த பூணூல் அமைப்பு ஆகியன இடம்பெறும். இதுவே பின்னர்ப் பல புரிகளைக் கொண்ட பூணூல் அமைப்பாகவும் மாறியது. முகம் வட்டமான அமைப்பினை யுடையதாயும், இலேசான சதைப் பற்றுடனும் அமைந்திருக்கும், உடலமைப்பு குறுகியதாக இருக்கும். முற்காலச் சோழர்களின் சிற்பங்களை விடப் பிற்காலச் சோழர்களின் சிற்பங்கள் அணிகலன்களும் அலங்காரங்களும் சற்று அதிகம் கொண்டவையாக விளங்கும். |