உலோகத்தால் செய்யப்படும் இறையுருவங்களையும் மனித உருவங்களையும் செப்புத் திருமேனிகள் எனப் பொதுவாகக் கருதுவர். தமிழகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர், விசய நகர நாயக்க மன்னர்கள் காலங்களில் பல்வகைப் பட்ட செப்புத் திருமேனிகள் வடிக்கப் பட்டன. இவை பொதுவாகக் கோயில் திருவிழாக்களின் போது திருவீதி உலா வருவதற்காக எடுத்துச் செல்லப் படுவதற்காகவே வடிக்கப் பட்டன. செம்பு, வெள்ளி, தங்கம், பித்தளை, தகரம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவையினால் செய்யப் படுவதால் இவற்றைப் ‘பஞ்சலோகப் படிமங்கள்’ என்றும் கூறுவர். |