பழந்தமிழ்ப் "பண்", இக்கால இந்திய இசையில் ‘இராகம்’ என்று சொல்லப்படுகிறது. பண்களுக்கு உரிய இசை ஏழு. பழந்தமிழர் இவற்றைக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என அழைத்தனர். இவற்றை எப்படி இசைப்பது? ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் உயிர் நெட்டெழுத்து ஒலிகளால் இவற்றை இசைத்தனர். தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளைச் ‘சுரம்’ என்றனர். அவற்றின் பெயர்களும் மாறின. எப்படி? ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று ஆயின. இவற்றைப் பாடும்பொழுது முதலெழுத்துக்கள் ஸ, ரி, க, ம, ப, த, நி என்று பாடினர். (இவற்றின் முதலெழுத்துகளே ஸ, ரி, க, ம, ப, த, நி என வடமொழி ஆயிற்று). 1.2.2 ஏழிசை சமஸ்கிருதத்தில் மாறிய முறை தமிழ்ப் பண்களின் ஏழு இசையின் பாடு ஒலியும் அது சமஸ்கிருதத்தில் மாறிய முறையையும் இந்த அட்டவணையில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
பண்கள் நூற்றுமூன்று எனக் கொண்டனர் பழந்தமிழர். நூற்றுமூன்று பண்கள் எவ்வாறு ஆயின? பண்களுக்கு உரிய இசை, ஏழு அல்லவா? குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று ஆரோசையிலும், தாரம், விளரி, இளி, உழை, கைக்கிளை, துத்தம், குரல் என அமரோசையிலும் ஏழு இசையும் அமைந்தால் அது "பண்" எனப்படும். (குறிப்பு : ஒலி அலகு (Frequency) கூடிச் செல்வது ஆரோசை. குறைந்து வருவது அமரோசை) கருநாடக இசையின் ஆரோகணம் அவரோகணம் என்பது தான் ஆரோசை அமரோசை ஆகும். இவ்வாறு ஆரோகண அவரோகணத்தில் ஏழு சுரங்களும் முறையே அமைந்தால் கருநாடக இசையில் இது "சம்பூர்ண இராகம்" எனப்படும். ஏழிசையில் ஆறு இசை கொண்டவை "பண்ணியல்" எனப்படும். (கருநாடக இசையில் இது "ஷாடவ இராகம்" எனப்படும்). ஏழிசையில் ஐந்திசை கொண்டது "திறம்" எனப்படும். (கருநாடக இசையில் இது "ஒளடவ" இராகம் எனப்படும்). ஏழிசைகளையும் பழந்தமிழர் இவ்வாறு வகுத்துக் கொண்டனர். பின் அவற்றைப் பின்வருமாறு பகுத்துக் கொண்டனர்.
பஞ்சமரபு நூலின் ஆசிரியர் அறிவனார் இந்த விளக்கத்தை ஒரு வெண்பாவில் கீழ்வருமாறு தருகிறார்.
1.2.4 சங்க இலக்கியங்களில் பண்கள் ஆம்பல் என்பது ஒருவகைப் பண்ணாகும்.இப்பண்ணைப்
பற்றிய செய்திகள் நற்றிணை
(123 : 10), ஐங்குறுநூறு
(215 : 3-5), குறிஞ்சிப்பாட்டு
(221-222)ஆகிய பாடல்களில்
காணப் பெறுகின்றன. கோவலர்கள் ஆம்பல் பண்ணை
இசைக்கின்றனர். தட்டை, தண்ணுமை போன்ற இசைக்கருவிகளுடன் மாலைக்
காலத்தில் இசைத்து
மகிழ்கின்றனர்.
காஞ்சிப் பண் துயருறும் மக்களின்
துயரம் போக்கப்
பயன்படுத்தப்பட்டு்ள்ளது. விழுப்புண் பட்டவர்கள், பேய்
பிடித்தவர்களின் வருத்தம் தீர இப்பண்ணினைப் பாடிய
குறிப்பு, புறநானூறு 296-யில் காணப்பெறுகிறது. மலையுறை தெய்வங்களை மகிழ்விக்க, கூத்தரும்
விறலியரும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியதாக மலைபடுகடாம்
குறிப்பிடுகிறது. நைவளம் எனும் பண்ணைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டு (146), சிறுபாணாற்றுப்படை (36-38), பரிபாடல் (18-20-21) வரிகளில் குறிப்புகள் உள. இப்பண் பகற்பொழுதில் இசைக்க வேண்டிய பண் என்றும், பாணன் யாழிசையுடன் பாடினான் என்றும், இப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. மேலும் குறிஞ்சி, செவ்வழி, பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரி என்ற பண்களைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. இப்பண்கள் இசைக்கும் காலம், நிலம், இப்பண்கள் தரும் உணர்வுகள் பற்றியும் தமிழர் இசை எனும் நூலில் ஏ.என். பெருமாள் குறிப்பிட்டுள்ளார். (ப.79) அவை வருமாறு. |