கலை நிகழ்த்துதற்கான அமைவிடமே ஆடுகளம் எனப்படுகிறது. கலைஞர்கள் மற்றும் பார்வையாளர் படைத்தற்கும், பார்த்து இன்புறுதற்கும் உரிய கலையின் படைப்பிடம் இதுவே ஆகும். ஆடுகளம் என்பதனை அவை, அரங்கு என, வளர்ச்சி நிலையில் பெயரிட்டழைப்பர்.
சங்க கால இலக்கியங்கள், நடத்துகலைகளுக்கான படைப்பு இடத்தினைக் ‘களம்’ எனற நிலையில் ஆடுகளம் என்றே பெரும்பாலும் பெயரிட்டு அழைக்கின்றன. விழாக்காலங்களிலும், மகிழ்ச்சியான நேரங்களிலும், அறுவடைக்காலங்களிலும் மக்கள் ஆடிப்பாடியதால் இயற்கையாக அமைந்த திறந்த வெளிப்பரப்புக்களே ஆடுகளங்களாக அமைந்தன.
(புய்த்தெறி = பிடுங்கியெறியும்; பூம்போது = பொலிந்த பூ;
கடுக்கும்
= ஒக்கும்)
என்னும் பெரும்பாணாற்றுப்படைப் பாடல்அடியும் ‘ஆடுகளம்’
குறித்த செய்தியைத் தெளிவுபடுத்துகின்றது.
ஆடுகளத்தினின்றும் மேம்பட்டதோர் நாடகக் களத்தினைத் திருவள்ளுவர் குறிப்பிட்டுச் சொல்கிறார். பரந்த வெளியில் அமைந்த ஆடுகளத்தினின்று மாறுபட்ட வடிவமான ‘கூத்தாட்டவை’ என்னும் வடிவம் பற்றிய செய்தியே அது.
என்று குறிப்பிடுகிறது குறள்.
சிலப்பதிகாரம் முதன் முறையாக நாடகக் கலையின்
வடிவங்கள் தேர்ந்த
அரங்கினுள் நடத்தப்பெற்ற நிலையை
எடுத்துக் காட்டுகிறது.
என்னும் பாடல் அடி பொதுமக்கள் பங்குபெற்ற ‘களங்கள்‘ பற்றிக் குறிப்பிடுகிறது. ஆனால், அரங்கேற்று காதையில் இடம் பெறும்,
என்னும் பாடல் அடி, வேந்தர்கள் பங்கு பெறும் ‘வேத்தியல்’
தன்மையிலான அடைப்பு அரங்கு
குறித்த செய்தியினைத் தந்து
நிற்கிறது. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் அரங்கு குறித்த இன்றியமையாத செய்திகளை விரிவாகத் தருகிறார்.
எனத் தொடங்கி விளக்குகிறார். அரங்கானது ஏழுகோல் அகலமும், எண்கோல் நீளமும் ஒரு கோல் குறட்டுயரமும் உடையதாக இருத்தல் வேண்டும். (ஒரு கோலென்பது உத்தமன் கைப் பெருவிரல் 24 கொண்ட மூங்கில் கோல். 8 அணு - 1 தேர்த்து; 8 தேர்த்து - 1 இம்மி; 8 இம்மி - 1 எள்ளு; 8 எள்ளு - 1 நெல்லு; 8 நெல்லு - 1 பெருவிரல் ஆகும். (இன்றைய அளவு நிலையில் 28” 32” 4’) அரங்கப் பலகைக்கும் உத்தரப் பலகைக்கும் இடையே உயரம் 4 கோல் (அல்லது 16 அடி) அரங்கிற்குச் செல்வாயில், வருவாயில் என இரு வாயில்கள் அமைந்திருத்தல் வேண்டும். அரங்கத்தூணின் நிழல் விழாதபடி நிலை விளக்கு ஏற்றப்படுதல் வேண்டும். ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்து வரல் எழினி என 3 வகைக் காட்சித் திரைகள் தொங்கவிடப்பட வேண்டும். ஒருமுக எழினி எனப்படுவது ஒரு பக்கத்தினி்ன்று மறுபக்கமாக விலகிச் செல்லும் திரையாகும். பொருமுக எழினி எனப்படுவது இருபக்கத்திலிருந்தும் வந்து நடுவே பொருந்தியும் இருபக்கமாய்ப் பிரிந்தும் செல்லக் கூடிய திரையாகும். கரந்து வரல் எழினி எனப்படுவது மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மலோகவும் செல்லும் திரையாகும். மேற்குறிப்பிட்ட திரையின் மேம்பட்ட திரை வடிவமாக ‘எந்திர எழினி’ என்னும் திரையைச் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது. |