3.9 தொகுப்புரை

    தமிழ் நாடகத்தின் பழைய வரலாற்றை உணர்ந்து வளர்க்க நாடகப் பிரதிகள் இல்லாத நிலையிலும் தமிழ் நாடக முன்னோடிகள் இக்கால நாடகத்தைக் கலையாக வளர்த்து உருவாக்கினார்கள்.மேடை, வானொலி, தொலைக்காட்சி, வாசித்தல் என்ற பல நிலைகளுக்கேற்ப நாடகக்கலை, வடிவ மாற்றங்களைப் பெற்று வளர்ந்தது. மரபான போக்குகளை மறுத்துப் புதுப்போக்குகளைக் காணும் இந்நாளைய வழக்கப்படி புதிய சோதனை முயற்சிகள் மூலம் நாடகக்கலை வளர்க்கப்படுகிறது. நாடகம் என்பது பார்ப்பதற்கானது என்ற கருத்து வலுப்பெற்றதுடன் நாடகம் சமூக மாற்றத்திற்கான கருவி என்பதும் உணரப்பட்டு இக்கால நாடகக்கலை வளர்ச்சி பெற்று வருகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. அங்கத நாடகத்தின் நோக்கம் என்ன?

விடை

2. மறுவாசிப்புச் செய்யும் முறையில் அமைந்த நாடகங்கள் எவை?

விடை

3. கவிதை நாடகங்கள் பெரும்பாலும் எதற்காக எழுதப்பட்டன?

விடை

4. தொலைக்காட்சியைச் சின்னத்திரை என்று ஏன் அழைக்கிறார்கள்?

விடை

5. வீதியிலும் பொது அரங்கங்களிலும் நடைபெறும் நாடகம் எது?

விடை