|  
 
     தமிழ்நாடு நாட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் 
 குதிரை ஆட்டம் ஒன்றாகும். கரகம், காவடியைப் போல
 வழிபாட்டுக் கலையாக அல்லாமல் பொதுமக்கள் கண்டுகளிக்கும் 
 பொருட்டு ஏற்பட்ட ஆட்டமாகப் பொய்க்கால் குதிரை ஆட்டம் 
 விளங்குகிறது. 
    கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியமான 
சிலப்பதிகாரத்தில்    மாதவி ஆடிய பதினொரு வகை 
ஆடல்களில், முன்பு துர்க்கை ஆடிய மரக்காலாடல் ஒன்றாகும். 
  
     மாயவ ளாடிய மரக்கா லாடலும் (கடலாடு காதை,
அடி 59)  
 என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.   
     வஞ்சத்தால், பாம்பு, தேள் முதலிய விடப் பூச்சிகளாக
 உருவெடுத்துத் தனக்கு இன்னலை விளைத்துத் தன்னைக்
 கொல்லக் கருதிய அï¢îணர்களின் செயலை உணர்ந்து துர்க்கை
 தன் கால்களில் கட்டையைக் கட்டிக் கொண்டு, அவர்கள்
 மிதிபட்டு மடியுமாறு ஆடிய ஆட்டமே மரக்கால் ஆடல் ஆகும்.
 மரக்கால் கொண்டு ஆடுதலின் மரக்காலாடல் ஆயிற்று.
 சிலப்பதிகாரத்தில் குறிப்பிடும்     மரக்காலாடல் 
 இன்று 
 பொய்க்கால் குதிரை ஆட்டமாக மாறிவந்தது.   
     இவ்வாறு காலில் கட்டை 
 கட்டி ஆடுதல் தமிழ் நாட்டில்
 மட்டுமின்றி ஆந்திரம், மத்தியப் பிரதேசம், 
 ஒரிசா போன்ற
 மாநிலங்களிலும் காணப்படுகின்றது. 6.3.1 பொய்க்கால் குதிரை  
     கால்களில் கட்டையைக் கட்டிக் 
 கொண்டு, உண்மையான
 கால்களில் நின்று ஆடாமல், பொய்யான கால்களில் 
 நின்று
 கொண்டு, குதிரை போன்ற உருவத்தைச் சுமந்து 
 கொண்டு
 ஆடுதல்  பொய்க்கால் குதிரை ஆட்டம் 
 ஆகும். மேலும்
 இந்த ஆட்டம்  புரவியாட்டம் என்றும் 
 அழைக்கப்படுகிறது.
 மதுரைப் பகுதியில் காலில் கட்டையைக் கட்டிக் கொள்ளாமல்
 வெறுங்காலில் சலங்கை கட்டிக் கொண்டு பொய்க்குதிரைக்
 கூட்டைச் சுமந்து கொண்டு ஆடும் மரபு உள்ளது. 
 இதனால்
 இந்த     ஆட்டம் “பொய்க் குதிரையாட்டம்” 
     என்று 
 அழைக்கப்படுகிறது.   
     தமிழ்நாட்டைப்     பொருத்தவரை 
     இப்பொய்க்கால்
 குதிரையாட்டம் முற்றிலும் பொழுதுபோக்கின் அடிப்படையில்
 தோன்றிய ஒரு கலையாகவே வழங்கி வந்துள்ளது. தமிழ்நாட்டில்
 பன்னெடுங் காலமாக மரக்காலாடல் வழக்கில் இருந்து வருகிறது.
 ஆனால் பொய்க்குதிரைக் கூட்டைச் சுமந்து 
 கொண்டு
 ஓடியதற்கான சான்றுகள்  தொல்காப்பியத்தில் 
 உள்ளன.
 தொல்காப்பியத்தில் அகத்திணை இயலில் பெருந்திணைக்கு
 இலக்கணம் கூறும் நூற்பாவில் தலைமகன் தான் 
 விரும்பிய
 பெண்ணை மணக்கப் பெண்ணின் பெற்றோர் தடை விதித்த
 போது, பனை ஓலையில் குதிரை போல் உருவம் செய்து அதனை
 உடலில் தாங்கிக் கொண்டு ஊர்த் தெருக்களில் 
 வந்து தான்
 விரும்பும் பெண்ணைத் தனக்குக் கட்டி வைக்கக் கோரிய செயல்
 “மடலேறுதல்” என்னும் பெயரால் வழங்கப்பட்டுள்ளது. 
 இது
 தொல்காப்பியத்தில் “ஏறிய மடல் திறம்” என்று பேசப்படுகிறது.
 ஆனால் காலில் கட்டை கட்டிப் பொய்க்குதிரைக் 
 கூட்டைச்
 சுமந்து ஆடலாக ஆடப்பட்டதற்கான சான்றுகள் எவையும்
 கிடைக்கவில்லை. இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
 தமிழ்நாட்டில் இப்பொய்க்கால் குதிரையாட்டம் 
 ஆடப்பட்டு
 வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.       1.25 அடி உயரமுள்ள கட்டைகளைக் 
 கால்களில் கட்டிக்
 கொண்டு, செய்தித்தாள், சாக்கு, காடாத் துணி, புளியங்
 கொட்டைப் பசை, பிரம்பு, இரும்புத் தகடுகள் ஆகியவற்றாலான
 பொய்க் குதிரைக் கூட்டை நாடாக் கயிற்றால் இணைத்து
 ஆடுபவரின் இடுப்பு உயரத்தில் தொங்கும்படி தோளில் தொங்க
 விட்டுக் கொண்டு கோந்தளம் அல்லது நையாண்டி மேள
 இசைக்கேற்ப ஆடுவர்.   
     தற்காலத்தில் தஞ்சையை அடுத்துள்ள 
 திருவையாற்றில்
 வாழ்ந்த இராமகிருட்டினன் முதன் முதலில் 
 பொய்க்கால்
 குதிரையாட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்தார். 6.3.2 அடவுகள் 
     பொய்க்கால் குதிரையாட்டத்தில் அரசனும் அரசியும் உலா 
 வருவது போன்ற நிலையில், ஆடுகளத்தைச் சுற்றி அரசனும் 
 அரசியும் கம்பீரமாக மூன்று முறை நடந்து வருவர். ஆண், பெண் 
 இருவரும் தனியாகவும் சேர்ந்தும் அடவுகளை ஆடுவர். காலில் 
 கட்டையைக் கட்டிக் கொண்டு 30 கிலோவிற்கும் மேலுள்ள 
 எடையைத் தோளில் சுமந்து கொண்டு நிற்கும் போது ஒரே 
 நிலையாக நிற்க முடியாது. அங்கும், இங்கும் தாளத்திற்கு ஏற்ப 
 அசைந்து கொண்டே ஆடுவர். இதனால் நிற்கும் பொழுதும் 
 ஏதேனும் தூண் அல்லது ஆளைப்பிடித்துத் தான் நிற்க முடியும். 
 பொய்க்கால் குதிரையாட்டத்தில் நடத்தல், ஓடுதல், குதித்தல், 
 குனிதல், நிமிர்தல், கால் தூக்கி ஆடுதல், முன் புறம் செல்லுதல், 
 பின் புறம் செல்லுதல், பக்கவாட்டுக்களில் செல்லுதல், கீழே 
 உட்கார்ந்து எழுதல் அனைத்தும் கீழே விழாமல் சமன் செய்து 
 ஆடுவர். மேலும் குதிரையை அடக்குவது போலவும் செய்வர். 
 இருவரும் நேருக்கு நேர் அடவுகள் செய்தும், வட்டமாகவும் 
 அடவுகளைச் செய்வர். பெண் ஆட்டக் கலைஞர் பல நளினமான 
 கால் அடவுகளைச் செய்வர். மேலும் காலில் அடவுகளைச் செய்து 
 கொண்டு, குதிரைக் கடிவாளத்தைப் பிடித்து முன்னும் பின்னும் 
 அசைந்து ஆடுவர். 6.3.3 இசைக்கருவிகள்  
     பொய்க்கால் குதிரையாட்டத்திற்குக் 
 கோந்தளம் எனப்படும்
 இரட்டை முகத்தோல் கருவி பக்க இசையாகப் பயன்படுகிறது.
 மேலும் இரு தவில்கள், இரு நாகசுரங்கள், பம்பை, கிடுகிட்டி
 போன்ற இசைக் கருவிகள் இவ்வாட்டத்திற்குப் பக்க இசையாகப்
 பயன்படுகின்றன.   
     தமிழகத்தில் அன்றி 
 இந்தியாவின் வேறு சில
 மாநிலங்களிலும் இவ்வாட்டம் ஆடப்பட்டு வருகிறது. ஆந்திர
 மாநிலத்தில் இந்த ஆட்டம் “கீலுகுர்ரலு” என்னும் 
 பெயரில்
 வழங்கப்பட்டு வருகிறது. ஒரிசாவில் “கையுதா” 
 எனவும்
 இராசசுதான் பகுதியில் “கச்சிகோடி” எனவும் வழங்கப்படுகிறது.   
     பொய்க்கால் குதிரையாட்டம் 
 தமிழ்நாட்டில் திருவிழாக்
 காலங்களிலும்,     திருமண ஊர்வலங்களிலும்,    அரசியல்
 ஊர்வலங்களிலும் இடம் பெற்று ஆடப்பட்டு வருகிறது.  |