|  
     
 இயற்கையில் பூத்து, இனிமையுடன் வாழ்ந்து வரும் 
 நிகழ்வு ஆட்டக் கலையாக நாட்டுப்புற ஆடல்கள் உள்ளன. 
 மண்ணின் மணம் பாடும் நாட்டுப்புற ஆடற் கலைகளாகக் 
 கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், 
 மயிலாட்டம் போன்றவை இன்றும் தமிழகத்தில் வாழ்ந்து 
 வருகின்றன. தெய்வ வழிபாட்டோடு கலந்தும், மகிழ்வுக் 
 கலைகளாகவும் அவை உள்ளன. மாரியம்மன் வழிபாட்டுடன் 
 கரகாட்டமும், முருக     வழிபாட்டுடன் காவடியாட்டமும், 
 மயிலாட்டமும், துர்க்கை வழிபாட்டுடன் பொய்க்கால் குதிரை 
 ஆட்டமும் இணைந்து விளங்குகின்றன. நாட்டுப்புற ஆடல்கள் 
 இலக்கண வரையறைக்குட்பட்ட நிலையில்     செவ்வியல்
 ஆடல்களாக வளர்ந்து வந்துள்ளன.  |