1. மனித நேயத்தில் நாவுக்கரசர் செய்த செயல் ஒன்றினை
    விவரிக்க.

    திங்களூரில் அப்பூதி அடிகள் என்பவர் தன்வீட்டிற்கு
வந்த திருநாவுக்கரசருக்கு விருந்து ஏற்பாடு செய்தார்.
அவ்விருந்திற்கு வாழை இலை பறிக்கச் சென்ற அப்பூதி
அடிகளின் மூத்த மகன் திருநாவுக்கரசு பாம்பு கடித்து
இறந்துபட்டான். அவனைப் பதிகம் பாடி நாவுக்கரசர்
பிழைக்க வைத்தார். இது மனித நேயத்திற்குரிய சான்றாகும்.