1.0 பாட முன்னுரை


    தமிழகத்தில் பல்வேறு சமயங்கள் தோன்றி வளர்ந்துள்ளன.
அச்சமயங்களுள் சமண சமயமும் ஒன்றாகும். தமிழகத்தில் கால்
ஊன்றிய சமயங்கள் அனைத்தும் தத்தம் சமயக் கருத்துகளைப்
பரப்புவதற்குத் தமிழ் மொழியைக் கருவியாகப் பயன்படுத்தின.
சமண சமயமும் அதற்கு விதி விலக்கன்று. இச்சமயத்தாரின்
தமிழ்ப் பணி மிகச் சிறந்தது. இப்பாடம் சமண சமயம் குறித்த
அறிமுகச் செய்திகளையும் பழந்தமிழ்நாட்டில் சமண சமயம்
இருந்த நிலையையும் விளக்கிக் கூறுகிறது.