1.6 தொகுப்புரை


    இதுகாறும் கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து,
பின்வரும் செய்திகளை விளங்கிக் கொள்ளலாம்.

  • துறவு நெறியை வற்புறுத்திக் கூறும் சமயம் சமணம்.
  • சமண மதத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட
    மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் என்ற
    பெயர்களும் உண்டு.
  • சமண சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தவர்கள்
    தீர்த்தங்கரர்கள்.
  • பத்திரபாகு முனிவர் காலத்தில்தான் சமண சமயம்
    தமிழ்நாட்டில் நுழைந்தது.
  • தமிழ்நாட்டில் தழைத்தோங்கி இருந்த சமண சமயம் சமயப்
    போர் காரணமாக வீழ்ச்சி அடைந்தது.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

(1) மகாவீரரின் சீடர்கள் எத்தனை பேர்?
(2) சந்திரகுப்த அரசனின் மதகுரு யார்? [விடை]
(3) வைசாக முனிவர் யாருடைய சீடர்?
(4) ஒளடதம் என்பதன் பொருள் என்ன?
(5) துறவறத்தின் மூலம் மட்டுமே வீடுபேறு அடைய
முடியும் என்று கூறிய சமயம் எது?