“தமிழின் இலக்கண அழகிற்குப் பலர் காரணர்
எனினும் சமணரே தலையாய காரணியர். அவர்தம்
பணிகள் தமிழிலக்கணத்தைப் பல கோணங்களில்,
கோலங்களில் வலிமைப்படுத்தின. எழுத்து, சொல்,
அகப்பொருள், புறப்பொருள், யாப்பு, பாட்டியல் என
இலக்கண மூலப் படைப்பில் அவை விரிந்தன. ஆக,
சமணரின் இலக்கணப் பணிகள் இலக்கணம்
படைப்பது,
உரை வரைவது, நிகண்டுகள் எழுதுவது
என்று
மும்முனைகளில் அமைந்தன. ஓரிடத்தை
நோக்கி, மூன்று முனைகளிலிருந்து ஒளி
பாய்ச்சப்படும்
போது, அவ்விடம் ஒளிமயம் ஆவது
போல்,
இலக்கணத் தமிழுலகம், சமணரின் மும்முனை
ஒளிப்பாய்ச்சலால்,
ஒளிமயம் ஆயிற்று”