1. மதுரைக்காஞ்சி சமண சமயம் பற்றிக் குறிப்பிடுவது
    என்ன?

    மதுரை மாவட்டப் பகுதிகளில் சமணர்கள்
வாழ்ந்திருந்த செய்தியை, மதுரைக் காஞ்சி உறுதி
செய்கிறது. மதுரையில் சமணப் பள்ளிகள் இருந்ததாக
இந்நூல் குறிப்பிடுகிறது. அங்கிருந்த அருகதேவன்
கோயில் பற்றி இந்நூலின் 475-482 அடிகளில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

    இக்கோயில் குளிர்ச்சி மிக்க நிழலை உடையது.
கோயில் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன.
இவ் ஓவியங்கள் கண்பார்வைக்கு எட்டாத உயரத்தில்
இருந்தன. இக்கோயிலுள் சாவகர் வணங்குகின்ற
காட்சியும் ஓவியமாக்கப் பட்டுள்ளது. சாவகர் என்பவர்
சமணரில்     விரதம்     காக்கும்     இல்லறத்தார்.
முக்காலங்களையும் உணர்ந்து உலகுக்கு உணர்த்தும்
ஆற்றலைப் பெறும் நோக்கில் சமண முனிவர்கள்
நோன்பினை மேற்கொள்கின்றனர். இதுவே மதுரைக்
காஞ்சி
சமண சமயம் பற்றிக் குறிப்பிவது ஆகும்.