3.0 பாட முன்னுரை


    எந்த ஒரு சமயத்திலும் பல பிரிவுகள் இருப்பது
இயற்கையாகும். தமிழகத்தில் தழைத்து வளர்ந்து சிறந்த நிலையில்
இருந்த சமண சமயத்திலும் பல பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு
சமயத்தைச் சார்ந்தவர்களின் வழிபாட்டு நெறிகளும் மாறுபட்டும் -
வேறுபட்டும் அமைந்திருப்பது கண்கூடாகும். அதுமட்டுமின்றி
ஒரே சமயத்தைச் சார்ந்த பல பிரிவினரின் வழிபாட்டு
நெறிகளும்கூட மாறுபட்டதாக இருக்கக் கூடும். எனவே,
இப்பாடத்தில் சமண சமயத்தில் உள்ள பிரிவுகள் பற்றியும்
அவற்றைச் சார்ந்த சமணர்களது வழிபாட்டு நெறிமுறைகள்
பற்றியும் காணலாம்.