4.4 இல்லறத்தாரின் ஒழுக்கங்கள்


    மாணவர்களே! சமணத் துறவிகளின் 28 ஒழுக்கங்களைப்
பற்றி அறிந்து கொண்ட நீங்கள் இப்பொழுது சமண சமயத்தில்
இல்லற (குடும்ப) வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் 10 ஒழுக்கங்கள்
பற்றித் தெரிந்து கொள்ளப் போகின்றீர்கள்.

பத்து ஒழுக்கங்களாவன:

1. கொல்லாமை - உயிர்க் கொலை     செய்யாது
இருத்தல்.
2. பொய்யாமை - பொய் பேசாது உண்மையே
பேசுதல்.
3. கள்ளாமை - பிறர் பொருளைக் களவாடாமல்
(திருடாமல்) இருத்தல்.
4. பிறன் மனை
விரும்பாமை
- பிறரின் மனைவியை மனத்தால்
கூட நினைக்காமை.
5. பொருள் வரைதல் - அளவாகப் பொருளைச் சேர்த்தல்.
6. கள் உண்ணாமை - கள் (மது) உண்ணாமல் இருத்தல்.
7. ஊன் உண்ணாமை - ஊன் (இறைச்சி) உண்ணாமல்
இருத்தல்.
8. தேன் உண்ணாமை - தேன் உண்ணாமல் இருத்தல்.
9. இரவு உண்ணாமை - இரவு நேரத்தில் உண்ணாமல் பகல்
பொழுதில் மட்டுமே உண்ணுதல்.
10. பெரியோரை
வணங்குதல்
- தீர்த்தங்கரர் உள்ளிட்ட பெரியோரை
வணங்குதல்.

    இப்பத்து ஒழுக்கங்களையும் சமண சமய இல்லறத்தார்
தவறாது பின்பற்றி நடக்க வேண்டும். அதுபோல் சமணத்
துறவிகள் மேலே கூறிய 28 ஒழுக்கங்களையும் தவறாது பின்பற்றி
நடக்க வேண்டும்.