1. சமண தத்துவத்தைச் சுட்டும் குறியீடு யாது? விளக்குக.

    சுவஸ்திகம்.

     சமண தத்துவத்தைச் சுட்டும் குறியீடாக
சுவஸ்திகம்     என்ற     அடையாளச்     சின்னம்
பயன்படுத்தப்படுகிறது. இதைப் பிறவிச் சக்கரம் என்றும்
கூறுவர். இக்குறியைச் சமணர்களின் இல்லங்களிலும்
கோயில்களிலும்     காணலாம்.     சுவஸ்திகக்
குறியீடு இது:

     உயிர்கள் செய்த புண்ணியங்களுக்கும்
பாவங்களுக்கும் ஏற்ற வகையில் நான்கு கதிகளில்
(தேவகதி, விலங்குகதி, நரககதி, மனித கதி) உயிர்கள்
சிக்கித் தவிப்பதை இக்குறியீடு (அ) சுட்டுகிறது. இப்
பிறவிச் சக்கரத்திற்கு மேலே உள்ள மூன்று புள்ளிகள்
(ஆ) மும்மணிகளைக் (நன்ஞானம், நற்காட்சி,
நல்லொழுக்கம்) குறிக்கின்றன.

     மூன்று புள்ளிகளுக்கு மேலே உள்ள பிறை
போன்ற கோடும், அக்கோட்டிற்கு மேலே உள்ள
ஒற்றைப் புள்ளியும் (இ) இருவினைகளை நீக்கி
வீடுபேறு அடைந்த உயிரைக் குறிப்பிடுகிறது.