பாடம் 4

A01114 : சீவக சிந்தாமணி

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் சீவக சிந்தாமணி எனும் காப்பியம் பற்றிப் பேசுகிறது. இது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று; இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர். ஏமாங்கத நாட்டு அரசன் சீவகன் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து, தன் பகைவன் கட்டியங்காரனை வென்று, இழந்த தன் நாட்டை மீட்டு, நல்லாட்சி செய்து இறுதியில் துறவு மேற்கொள்ளும் வரலாறு பற்றிப் பேசுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
பெருங்காப்பியத்தின் அமைப்பினை அறியலாம்.
பல்வேறு வகையான மணமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
பகைவனைச் சூழ்ச்சியால் வெல்ல வேண்டும் எனும் அக்கால அரசியல் போர் அறத்தை உணரலாம்.
பல்வேறு சமயக் கொள்கைகளை அறிவதோடு, சமண சமயத்தின் சிறப்பினை உணரலாம்.
காமன் வழிபாடு அக்காலச் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தமையைத் தெளிவாக அறியலாம்.
அரசர்களிடம் சுயம்வரம் நடத்தித் திருமணம் செய்யும் நடைமுறை இருந்ததை அறியலாம்.
இசைக்கலை, பந்தாடல் விளையாட்டு முதலானவை, சிறப்புற்றிருந்தமையை உணர்ந்து கொள்ளலாம்.
அக்காலத்தில் நிலவியிருந்த பல அரசியல் அறம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
திருமணம், குழந்தைப் பிறப்பு, விழாக்கள் முதலான சிறப்பான சடங்குமுறைகளுடன் நடத்தப்பட்டதை அறியலாம்.