இந்தப் பதின்மூன்று சருக்கங்களில்;
முதல் சருக்கமும்; பதின் மூன்றாம்
சருக்கமும் சேக்கிழார் தாமே படைத்துக் கொண்டவை.
முதல்
சருக்கம்
கயிலைமலைச் சிறப்பினைக் கூறும் முகமாகத் திருமலைச்
சருக்கம்
என்று கூறப்பட்டது. பதின்மூன்றாம்
சருக்கம் சுந்தரர்
வெள்ளை யானை
மீது ஏறிக் கயிலாயம் செல்வதை விவரிக்கும்
முகமாக வெள்ளானைச்
சருக்கம் எனப்பட்டது. ஏனைய பதினொரு
சருக்கங்கள்,
திருத்தொண்டத் தொகைப் பாடல்களின் முதல் சீரையே
பெயராகப்
பெற்றவை. சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில்
பதினொரு
பாடல்கள் உள்ளன.
இப்பாடல்களின் முதல் சீர், அல்லது
முதல் ஓரிரு
சீர்கள், அல்லது பாடலின் முதல் அடி இவற்றின் பெயரால்
பெரியபுராணச் சருக்கங்களின் பெயர்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
பெரியபுராணப் பாடல்கள் பெரும்பாலும் விருத்தப் பாக்களால்
ஆனவை. மொத்தப் பாக்களின் எண்ணிக்கை: 4286. இவற்றுள்
கொச்சகக் கலிப்பா, கலிவிருத்தம், கலித்துறை முதலியனவும்
அடங்கும்.
இப்புராணத்துள் நாயன்மார் அறுபத்து மூவரின் வரலாறுகள்
பாடப்பட்டுள்ளன. இவரல்லாது ஒன்பது தொகையடியார் வரலாறும்
கூறப்பட்டுள்ளது.
தொகையடியார் என்பது குறிப்பிட்ட அடியார்களின்
குழுக்களைக் குறிப்பது. அவர்கள் வருமாறு:
1) தில்லை வாழ் அந்தணர்
2) பொய் அடிமையில்லாத புலவர்
3) பத்தராய்ப்
பணிவார்
4) பரமனையே பாடுவார்
5) சித்தத்தைச் சிவன்
பால் வைத்தார்
6) திருவாரூர்ப் பிறந்தார்
7) முப்போதும் திருமேனி
தீண்டுவார்
8) முழுநீறு பூசிய முனிவர்
9) அப்பாலும்
அடிச்சார்ந்தார்
1.5.2 அடியார் புராணம்
பெரியபுராணத்துள் இடம் பெற்றுள்ள அடியார் சிலரின் வாழ்க்கை
நிகழ்ச்சிகள் குறிப்பாக இங்கே தரப்பட்டுள்ளன.
|