2.3
சொல்லாட்சி
|
பெரியபுராணம் ஒர்
இலக்கியக்
கடல். இதில் மூழ்கி
இலக்கிய
நயங்களை முத்தாகக் கொண்டு வந்தவர் பலர்.
கடலை ஆராய்வார்க்குப்
புதுப்புதுப் பொருள்கள் கிடைக்கும்.
அது போன்று இலக்கியக் கடலை
ஆராய்வாருக்குப் புதுப்புது
நயங்கள் கிடைக்கும். இலக்கிய நயத்தில்
சொல்லாட்சித் திறன் முதன்மையான இடத்தைப் பெறுகிறது. ஒரு
சொல்லே கூட
இலக்கியம் முழுவதையும் வளைத்துத் தன்னுள்
இணைத்துக்
கொண்டிருக்கும். அத்தகைய ஆற்றல் சொற்களுக்கு
உண்டு.
சேக்கிழார் பெரியபுராணத்தைப் பக்திக் காப்பியமாகப்
படைத்திருப்பினும், அதனுள் இலக்கிய
நயங்களுக்கும்
சொல்லாட்சிகளுக்கும் குறைவில்லாமல் படைத்துள்ளார் என்பர்.
|
2.3.1 சொல்லும்
பொருளும்
|
ஆரூரில் சுந்தரர்
பரவை நாச்சியாரைக் காண்பதும், கண்டு
காதல்
கொள்வதும் அகப்பொருள் சுவைபடச் சேக்கிழாரால்
புனையப்பட்டுள்ளன. பரவையாரைக் கண்டது முதல் சுந்தரர் காதல்
மயக்கம் ஏறிப் பித்தராய்ப்
புலம்பத் தொடங்குகிறார். பரவை, பரவை
என்று அவள் பெயரையே
திரும்பத் திரும்பக் கூறுகிறார். இந்தப்
பரவை என்ற சொல்லை வைத்தே
சேக்கிழார் சொல் விளையாட்டுச்
செய்கிறார்.
பாடல் இதோ:
|
பேர்பரவை பெண்மையினில்
பெரும்பரவை
விரும்புஅல்குல்
ஆர்பரவை அணி்திகழும்
மணிமுறுவல்
அரும்பரவை
சீர்பரவை ஆயினாள்
திருஉருவின்
மென்சாயல்
ஏர்பரவை இடைப்பட்ட
என்ஆசை எழுபரவை .
(பெரிய. தடுத்தாட் கொண்ட புராணம். 148)
|
(பேர்பரவை
= இவள் பெயர்பரவை;பெரும் பரவை = பெரு+ உம்பர்
+ அவை - பெரிய தேவர் அவை
(தேவர் கூட்டம்);
ஆர் பரவை =
பரவு + ஐ - வாழ்த்தும் தெய்வம்;
அரும்பரவை = அரும்பர் +அவை;
முல்லை அரும்புகள் போன்ற பற்களை
உடையவள்; சீர்பரவை
=
சிறந்த பரவை எனும் கூந்தலை உடைய இலக்குமி;
ஏர் பரவை =
அழகிய பரப்பு; எழு
பரவை
= ஏழு கடல்கள்)
இப்பாடலின் பொருள்
வருமாறு
|
ஒரு சொல் பல
பொருள்
|
அவள் பெயரோ பரவை;
தேவர் கூட்டம் விரும்பும் திலோத்தமை
முதலிய அழகிகளும் வாழ்த்தும்
தெய்வம் போன்றவள்; அழகிய,
வரிசையான முல்லை அரும்புகளை ஒத்த பற்களை உடையவள்; சிறந்த
பரவை என்னும் கூந்தலை உடைய இலக்குமியைப்
போன்றவள்;
மென்மையான இவளது உருவத்தின் சாயலாகிய அழகிய பரப்பில் அகப்பட்ட என் ஆசை ஏழு கடல்கள் அளவுக்குப் பெரியது.
|
இவ்வாறு பரவையை
வருணிக்கும் சேக்கிழார் பரவை என்ற சொல்லை
வைத்துக் கவிநயம் தோன்றப்
பாடலைப் புனைந்துள்ளார்.
|
பரவை என்னும் சொல்
|
ஏழு கடல்கள்
அளவுக்கு எழுந்த காதல் தாகத்தைக் கூறும் இப்பாடலில் பரவை
என்ற சொல் பின்வரும் ஏழு பொருள்களில்
பயின்று
வரக் காணலாம்.
|
1) |
ஒரு
பெயர்
|
2) |
தேவர் அவை |
3) |
வாழ்த்தும் தெய்வம்
|
4) |
முல்லை அரும்பு |
5) |
கூந்தல் |
6) |
பரப்பளவு |
7) |
கடல் |
|
2.3.2 சொல்லும் எண்ணிக்கையும்
|
சொல் விளையாட்டு மூலம் இலக்கிய நயத்தை வெளிப்படுத்திய
சேக்கிழார் ஒன்று இரண்டு என எண்ணிக்கையை வைத்தும்
பாடல் படைத்துள்ளார்.
அப்பாடல் வருமாறு:
|
செம்மை
வெண்ணீற்று ஒருமையினார்
இரண்டு பிறப்பின்
சிறப்பினார்
மும்மைத் தழல்ஓம் பியநெறியார்
நான்கு வேதம்
முறைபயின்றார்
தம்மை ஐந்து
புலனும்பின்
செல்லும் தகையார்
அறுதொழிலின்
மெய்ம்மை ஒழுக்கம்
ஏழ்உலகும்
போற்றும்
மறையோர் விளங்குவது
(பெரிய. சண்டேசுர நாயனார் புராணம். 2)
|
(செம்மை
= பெருமை / சிறந்த; வெண்ணீறு = திருநீறு / விபூதி;
ஒருமையினார் =ஒருமை
நேயம் உடையவர்;இரண்டு பிறப்பு = இரு
பிறப்பு / அந்தணர்க்கு நிகழ்த்தப்படும்
உபநயனம் என்னும் சடங்கிற்கு
முன் உள்ள பிறப்பும் பின் உள்ள பிறப்பும் என இரண்டு; மும்மைத்
தழல் = மூன்று தீ ( அந்தணர்களால் வளர்க்கப்படும் முத்தீ); நான்கு
வேதம்
=ரிக்,
யசுர்,
சாம, அதர்வணம் ஆகிய நால் வேதங்கள்;
ஐந்து
புலன் = கண்,
காது, மூக்கு, வாய், உடம்பு ஆகிய பொறிகளால்
அடையும் புலன் உணர்வுகள்.
அறுதொழில் = ஆறு தொழில் (ஓதல், ஓதுவித்தல்,
வேட்டல்,
வேட்பித்தல்,
ஈதல், ஏற்றல் என்னும்
அந்தணர் தொழில்கள் ஆறு); ஏழ்
உலகம் =
உலக வகைப்பாடு /
மேல் ஏழ் உலகம், கீழ்
ஏழ்
உலகம்)
|
ஒன்று முதல் ஏழு வரை
|
இப்பாடலில் ஒன்று
இரண்டு என எண்ணிக்கையால் அமைந்தவை வருமாறு:
|
1) ஒருமையினார் |
-
ஒருமைநேயம் |
2) இரண்டு பிறப்பு |
-
இருபிறப்பு |
3) மும்மைத்தழல் |
-
முத்தீ |
4) நான்கு வேதம் |
-
நால்வேதம் |
5) ஐந்து புலன் |
-
ஐம்புலன்கள் |
6) அறு தொழில் |
-
ஆறு தொழில் |
7) ஏழ் உலகம் |
-
ஏழுலகம் |