மிகுந்த ஆற்றல் உடைய இராமன் சீதையுடன் காட்டிற்குச்
சென்றான். அப்போது வலிமையுடைய
இராவணன்
சீதையைக் கவர்ந்து சென்றான். அவ்வாறு கவர்ந்து
செல்லும் போது அவளிடம் இருந்த
மதிப்பு மிக்க நகைகள்
கீழே விழுந்தன. கீழே
விழுந்த அந்த நகைகளைக்
குரங்கின் கூட்டம் கண்டெடுத்து
அணிந்து கொண்டு
திரிந்தது.
|