4.0 பாட முன்னுரை

இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்களுள் பூங்கொடிக் காப்பியத்திற்கு ஒரு தனி இடமுண்டு. இந்தக் காப்பியம் தமிழ், தமிழ்உணர்வு, தமிழ்ப்பண்பாடு, தமிழர் முதலியவற்றை முன்னிலைப்படு்த்துகிறது. இவ்வகையில் இந்தக் காப்பியம் தனித்தன்மை உடையதாக உள்ளது. மேலும் காப்பியங்களில் பொதுவாக இடம்பெறும் நம்பத்தகாத செய்திகள் இந்தக் காப்பியத்தில் இல்லை. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பல தமிழ்ச் சான்றோர், தமிழறிஞர்கள், தமிழ் உணர்வினர் இந்தக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளனர். இவ்வகையிலும் பூங்கொடிக் காப்பியம் தனித்தன்மை உடையதாகத் திகழ்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பூங்கொடிக் காப்பியத்தைப் பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.