1)

ஏனியட்     உரோமின் தேசியக்     காப்பியமாகக்
கருதப்படுவதற்குக் காரணம் கூறுக.

உரோம்     நாட்டின்     சரித்திரச்     சிறப்பையும்,
வல்லமையையும்,     தொன்மக்     கதைகளையும்
பாடுபொருளாகக் கொண்டது ஏனியட். உரோமப் பேரரசு
ஏனியாஸ் என்னும் மாவீரனால் நிறுவப்பட்ட கதையைக்
கூறுகிறது. உரோமின் தலைசிறந்த அரசனான அகஸ்டஸின்
ஆட்சிச் சிறப்பின் குறியீடாகத் திகழ்கிறது. எனவே ஏனியட்
உரோமின் தேசியக் காப்பியமாகப் போற்றப்படுகிறது.



முன்