பாடம் 1

A04141 : பதினாறாம் நூற்றாண்டு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் பதினாறாம் நூற்றாண்டில் இருந்த தமிழக
அரசியல் சூழ்நிலையைக் குறிப்பாகக் காட்டுகிறது. அதன்
காரணமாகத் தோன்றிய தலபுராணங்கள், வட மொழியில்
இருந்து மொழியாக்கம் செய்யப் பெற்ற புராணங்கள்,
மணிப்பிரவாள நடையின் செல்வாக்கு, நீதி நூல்கள்,
மடங்கள் புரிந்த தமிழ்த் தொண்டு என்பவற்றைக் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
தலபுராணங்களைப் பற்றி அறியலாம்.
வடமொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப் பெற்ற
புராணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
மணிப்பிரவாள நடை என்பதைப் பற்றி அறியலாம்.
மடங்கள் தமிழை வளர்த்த வகை பற்றி அறியலாம்.