இதுவரை மொழிகளின் வகைகளைப் பார்த்தோம். இனி,
மொழி அமைப்பைக் கொண்டு வகைப்படுத்துவது பற்றிப்
பார்க்கலாம். ஒரு மொழியின் சொற்களைக்
கொண்டு
வகைப்படுத்துகிறோம்.
மொழியில் உள்ள சொற்கள் முக்கியமானவை. எழுத்துகளின்
சேர்க்கை
சொல் ஆகும். எழுத்தின் அடிப்படையாக அமைவது
ஒலியன். எழுத்துகள் கூடிச் சொற்கள் அமையும்
விதம் எல்லா
மொழிகளிலும் காணக் கூடியதே. சொல் அமைப்பைக் கொண்டு
என்று மொழியை வகைப்படுத்தலாம்.
அசைமொழியில் சொற்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதில்லை.
ஒவ்வொரு சொல்லும் தனித்தனியே நின்று தன் அளவில்
பொருள் உணர்த்துவது அசைமொழி ஆகும். அசைமொழியில்
சொல் ஒவ்வொன்றும் ஓர் அசைச் சொல்லாகவே இருக்கும்.
பெரும்பாலும் அடிச்சொல்லாகவே இருக்கும். ஒலிப்பு
முறையில்தான் வேறுபாட்டைக் காட்டும்படி இருக்கும். ஒரு
சொல்லை எடுத்தல், படுத்தல், நலிதல் என்ற நிலைகளில்
உச்சரிக்கலாம். ஒவ்வொரு உச்சரிப்பின்போதும் பொருள்
வேறுபடும். சீனமொழி, சயாமிய மொழி, பர்மீய மொழி,
திபெத்திய மொழி ஆகியன
அசைமொழிகளாகும்.
அசைமொழியில் சொற்களை, ‘பொருள் உணர்த்தும் சொற்கள்’,
‘வெறும் சொற்கள்’ என்று வகைப்படுத்துவர்.
பொருள் உணர்த்தும் சொற்களுக்கும், வெறும் சொற்களுக்கும்
இடையிலான வேறுபாட்டை உணர்த்துவதே இலக்கணம் ஆகும்.
அசைமொழியில் சொல் இடத்துக்கேற்பப்
பொருள் தரும்.
அடிச்சொல் இரண்டு சேரும் போது பல சொற்கள் இடையில்
வரும். சொற்கள் பல ஒட்டி நிற்க, வாக்கியம் உருவாகிறது.
அவ்வகை அமைப்புடையது ஒட்டுமொழி எனலாம். தமிழ்மொழி,
திராவிடமொழிகள், சித்திய
மொழிகள் முதலியவை
ஒட்டுமொழிகள் ஆகும். சொற்கள் அடுத்தடுத்து ஒட்டி
வரிசையாக அமைவதன் மூலம் சொல் தொடர் உருவாகிறது.
இதில் வரிசைக் கிரமம் உண்டு. நினைத்தபடி எல்லாம்
ஒட்டுவதில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
சொல்லின் வேராக அமைவது அடிச்சொல். பெயரைக்
குறிப்பது பெயர்ச்சொல். செயலைக் குறிப்பது வினைச்சொல்.
அடிச்சொல்லுக்கும், வினைச்சொல்லுக்கும் தனிப்பட்ட
அளவில்
பொருள் உண்டு. இடையும் உரியும் தாமே தனித்து நின்று
பொருள் தராது. பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ
சார்ந்துதான் இடைச்சொல் அமையும். தனியே வராது.
இடைச்சொல் பெயர், வினையுடன் ஒட்டி வருவதால்,
‘ஒட்டுமொழி’ என்று வழங்கப்படுகிறது.
(எ-டு)
கண் + அன் |
 |
கண் = அடிச்சொல்
அன் = இடைச்சொல் |
இங்கு ‘அன்’ என்ற இடைச்சொல் ஒட்டுமொழியாக வந்தது.
தமிழில் ஒவ்வொரு சொல்லையும் இப்படிப் பகுத்துப்
பார்த்தால் பல்வேறு ஒட்டுகள் இருத்தலை அறியலாம். ஓர்
எழுத்து தனித்து நின்றும் பொருள் தரும்.
‘ஆ !‘ - உணர்வு வெளிப்பாடு
|
‘தீ’ - நெருப்பு |
ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து நின்றும்
பொருள் தரும். ஒரு சொல்லைப் பகுக்க முடிந்தால் அதன்
பெயர் பகுபதம். பகுக்க முடியாவிட்டால் அதன் பெயர்
பகாப்பதம்.
ஓடி வந்தான். |
வந்து போனாள். |
ஓடி, வந்து என்பன இறந்த காலத்தைக் காட்டும் முற்றுப்
பெறாத வினைச்சொற்கள். எனவே இவற்றை இறந்த கால
வினையெச்சங்கள் என்பர். இங்ஙனம் ஒட்டுகள் அமைகின்றன.
ஒட்டுகள் சொல்லில் அமையும் தன்மையை வைத்து, இவற்றை,
வேர்ச்சொல்லின் முன்னால் ஒட்டுவதை முன் ஒட்டுச் சொல்
என்றும், வேர்ச்சொல்லின் பின்னால் ஒட்டுவதைப் பின்
ஒட்டுச்சொல் என்றும், இரண்டு வேர்ச்சொற்களுக்கு இடையி்ல்
ஒட்டுவதை உள் ஒட்டுச்சொல் என்றும் கூறுவர். ஒட்டு
மொழிகளில் இத்தன்மையைக் காணலாம்.
|