1.6 தேசிய மொழி, ஆட்சி மொழி, இணைப்பு மொழி

    ஒவ்வொரு மொழிக்கும், அம்மொழி வழங்கும் நாட்டிற்கும்
உள்ள உறவைக் கொண்டு மொழியை வகைப்படுத்தலாம்.
இந்தியாவில் ‘இந்தி மொழி’ தேசிய மொழியாக உள்ளது.
பெரும்பாலோர் பேசும் மொழி என்ற தகுதி அடிப்படையில்
தேசிய மொழியாக ’இந்தி மொழி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ‘தமிழ்’ ஆட்சி மொழியாக உள்ளது. தமிழகத்தி்ல்
பெரும்பான்மையர் தமிழர். தமிழ் வழியே அரசின் செயல்பாடுகள்
அமையும் வண்ணம் தமிழக அரசின் ஆட்சி மொழி தமிழாக
உள்ளது. தேசிய மொழியைப் பயன்படுத்தும் இந்திய நடுவண்
அரசும், மாநில மொழியைப் பயன்படுத்தும் மாநில அரசும்
தங்களுக்கிடையே     கருத்துப்     பரிமாற்ற மொழியாக
ஆங்கிலத்தையும்     பயன்படுத்துகின்றன.     அவ்வகையில்
தமிழகத்தில்,

தமிழ் - ஆட்சி மொழி
இந்தி - தேசிய மொழி
ஆங்கிலம் - இணைப்பு மொழி (Link Language)

என்ற நிலை உள்ளது.