மொழியில் பொருள் வேறுபாட்டை உண்டாக்குகின்ற
ஒவ்வோர் ஒலியும் அந்த மொழியில் ஒலியன் என்று
கொள்ளப்படும். தமிழில், அணி என்பதும், ஆணி என்பதும்
வேறுவேறு பொருள் கொண்ட சொற்கள். அ, ஆ இந்தப்
பொருள் வேறுபாட்டுக்குக் காரணமாக அமைந்துள்ளன. ஆகவே
அ, ஆ ஆகிய இரண்டு ஒலியன்களும் தனித்தனி ஒலியன்கள்
என்று கொள்ளப்படும். தமிழில், கடல்
பங்கு
பகல்
ஆகிய சொற்களை ஒப்பிட்டால், க் என்ற ஒலியன்
ஒலிப்பொலியாகவும், உரசொலியாகவும் ஒலிக்கக் காணலாம்.
இப்படிச் சூழலுக்கு ஏற்பத் திரிபடைந்து ஒலிக்கும் ஒலி
மாற்றொலி ஆகும். க் என்ற ஒலியனுக்கு k. g. h என மூன்று
மாற்றொலிகள் உள்ளன. இவை,
k |
- மொழி முதலில் வரும் - கடல் |
|
ஒற்று இரட்டும் சூழலில் வரும் - பக்கம் |
g |
- மெல்லினத்தின் பின் வரும் - பங்கு |
h |
- ஏனைய இடங்களில் வரும் - பகல் |
தமிழ் ஒலியன்கள், தமிழ்
ஒலியன்களின் மாற்றொலிகள்
வருகை இடம் ஆகியன
பரிசீலிக்கப் படுகின்றன.
தமிழ்மொழியில் கால ஓட்டத்தில் வேற்று மொழிச் சொற்களை
அந்த மொழியின் ஒலியிலேயே எழுதிக்காட்டும் நிலை
ஏற்பட்டது. சில புதிய ஒலியன்களுக்கு இடம் உண்டானது. ஜ், ஸ்,
ஷ், ஹ் முதலியன புதியவை. இவற்றைத் துணைநிலை
ஒலியன்கள் எனலாம். துணைநிலை ஒலியன்கள் ஒரு காலத்தில்
ஏற்கப்பட்டு, இன்னொரு காலத்தில் விலக்கப்படவும் கூடும்.
அவற்றை ஏற்பதும், விலக்குவதும் தமிழ் மக்களின்
மனப்பாங்கையும், சமுதாயச் சூழலையும் பொறுத்தது.
தமிழில் உயிரொலிகள் மொழியில் முதல், இடை, கடை
ஆகிய மூன்று இடங்களிலும் வரும். மெய்களில் எந்தெந்த
மெய்கள் மொழிக்கு முதலில் வரும் எந்தெந்த மெய்கள்
மொழிக்கு இடையில் வரும், எந்தெந்த மெய்கள் மொழிக்கு
இறுதியில் வரும் என்று மெய்களின் வருகை முறையினை
ஒலியனியல் முறையாக ஆராய்ந்து தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ் மொழியில் உயிர் ஒலியன்கள் இணைந்து வருவதில்லை.
உயிர் ஒலியன்கள் இணைய வேண்டிய சூழல் வந்தால் தமிழில்
உடம்படுமெய் வந்து உயிர் ஒலிகளை இசைவுபடுத்தும். மெய்
ஒலியன்கள் இணையும் போது இரண்டு மெய்கேளா, இரண்டுக்கு
மேற்பட்ட மெய்கேளா இணையலாம். ஒரு மெய் இரட்டிப்பாகி
இணையலாம். வேறு வேறு மெய்களும் இணையலாம். மெய்கள்
ஒன்றுடன் ஒன்று இணையும்போது
அவை சில
நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டே இணைகின்றன. அந்த
நெறிமுறைகள் ஒலியனியலில் முறையாக விளக்கப்படுகின்றன. |