ஓர் உருபனில் உள்ள ஒலியனை, உருபொலியன் என்கிறோம்.
ஓர் உருபனும் இன்னோர் உருபனும் சேரும் போது, அந்த
உருபன்களில் உள்ள ஒலியன்களில் மாற்றம் நிகழ்வது உண்டு.
உருபொலியனில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வது
உருபொலியனியல், உருபொலியனியலைத் தமிழ் இலக்கணிகள்
புணரியல், சந்தி எனக் குறிப்பர். புணர்ச்சி என்பது சேர்க்கை
ஆகும். எழுத்ததிகாரத்தில் தொல்காப்பியர்
நான்காவது இயலாகப்
புணரியலைப் படைத்துள்ளார். புணர்ச்சியில் நேரும்
மாற்றங்களைப் பற்றி அதற்குப் பின்வரும் இயல்களில்
தெளிவாகக் கூறுகிறார். எனவே புணரியலைப் பிற
இயல்களை
விளக்கப் பின்னணியாகக் கொள்கிறார் எனலாம்.
இரண்டு சொற்கள் சேரும்போது முதலில் நிற்கும்
சொல்
நிலைமொழி. அதை அடுத்து அதனோடு வந்து சேரும் சொல்
வருமொழி ஆகும். புணர்ச்சி நிலைமொழிக்கும், வருமொழிக்கும்
இடையே மட்டும் நிகழும் என்ற அடிப்படையை முறையாகக்
கூறுகிறார் தொல்காப்பியர் (107).
சான்று : மரம் + வேர் = மரவேர்
இதில் மரம் நிலைமொழி. வேர் - வருமொழி. இந்த
இருமொழிப் புணர்ச்சியில் தோன்றல், திரிதல், கெடுதல்
ஆகிய மாற்றங்கள் நேர்கின்றன.
மொழியியலார் அகச் சந்தி, புறச் சந்தி என்று
பிரிக்கின்றனர். ஓர் அடிச்சொல்லும், விகுதியும் சேரும்போது
அந்தச் சொல்லுக்கு அகத்தே அமையும் மாற்றம் அகச்சந்தி
ஆகும்.
சான்று :
கல் + இல் |
= கல்லில் |
(நிலைமொழி + விகுதி) |
|
தெரு + இல் |
= தெருவில் |
நிலம் + இல் |
= நிலத்தில் |
ஊர் + இல் |
= ஊரில் |
(அடிச்சொல் + விகுதி) |
- (அகச்சந்தி) |
ஒரு முழுச்சொல்லும், இன்னொரு
முழுச்சொல்லும்
சேரும்போது அங்கே நேரும் மாற்றம் ஒரு சொல்லின் புறத்தே
அமைவது, இது புறச்சந்தி ஆகும்.
சான்று :
இராமனை + பார் = இராமனைப் பார் |
சொன்னதை + செய் = சொன்னதைச் செய். |
சீதையை + கண்டேன் + சீதையைக் கண்டேன் |
நீந்த + தெரியும் = நீந்தத் தெரியும் |
இங்கு க், ச், த், ப் ஆகிய ஒற்றுகள் ஒரு சொல்லுக்குப்
புறத்தே மிக்கு வந்தன.
எனவே இவை புறச்சந்தி ஆகும்.
தமிழ் மொழியில் அகச்சந்தியில் உயிரோடு உயிர் சேர்ந்து
வருவதில்லை. உயிரும் உயிரும் சேரும்போது அவற்றிடையே ய்
அல்லது வ் உடம்படுமெய்யாக அங்கு வந்து சேர்ந்து விடும்.
சான்று :
கிளி + அழகு = கிளியழகு |
தெரு + இல் = தெருவில் |
இஈஐ வழி யவ்வு மேனை
உயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும்
உயிர் வரின் உடம்படுமெய் என்றாகும்(நன்னூல் -
162) |
என்று தமிழிலக்கணத்தில் வரையறை செய்யப்படுகிறது.
தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்றுமொழி மூவிடத்து மாகும்(நன்னூல் - 154) |
என்று நிலைமொழி இறுதியில் உயிர் நிற்க வருமொழி முதலில்
வல்லெழுத்து வந்தால் அங்கு
வல்லொற்றுத் தோன்றும்.
சான்று : புலி + குட்டி = புலிக்குட்டி
இரண்டு சொற்கள் அல்லது சொற்கூறுகள் சேரும்போது
அவற்றில் உள்ள
எழுத்து திரிந்து வேறாதல் உண்டு.
சான்று : கல் + தூண் = கற்றூண்
பொன் + குடம் =
பொற்குடம்
மண் + குடம் = மட்குடம்
நிலைமொழியும், வருமொழியும் சேரும்போது அவற்றில்
உள்ள எழுத்துகளில் ஒன்றோ, பலவோ மறைந்து விடுவதுண்டு.
இது மறைதல் அல்லது கெடுதல் என்று கூறப்படுகிறது.
சான்று : மரம் + வேர் = மரவேர்
அகம் + கை = அகங்கை, அங்கை
|