பாடம் 4

A05134 : சோழர் காலத் தமிழ் - சொல்லியல்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் சோழர் காலத் தமிழில் சொல்லியல்
அளவில் ஏற்பட்ட பல மாற்றங்களைக் கூறுவதாக
அமைந்துள்ளது. அக்காலக் கட்டத்தில் தமிழ்மொழியின்
இலக்கண அமைப்பில் ஏற்பட்ட வேறு பாடுகளையும் சொல்
நிலையில் உண்டான மாற்றங்களையும் விளக்கிக் கூறுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்:

சோழர் காலத்தில் எழுந்த இலக்கண, இலக்கிய நூல்கள்
பற்றிய செய்திகளையும், மொழியை அறிய உதவும் பிற
கல்வெட்டுகள், ஆவணங்கள், சாசனங்கள், செப்பேடுகள்
போன்ற ஆதாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
சோழர் காலத் தமிழ்மொழியில் உள்ள பல்வேறு
இலக்கணக் கூறுகளையும், அவை பெயரியல் அளவில்
மாறுபடும் விதங்களையும் அறிந்து கொள்ள இயலும்.
இலக்கண வகைகளில் ஒன்றான வினைச் சொற்களின்
பல்வேறு வகைகள் சோழர் காலத் தமிழில் வழங்கிய
முறைகளைப் பற்றிய செய்திகளை நன்கு உணர்ந்து
கொள்ளலாம்.