தன்மதிப்பீடு : விடைகள் - I

(5)

பாறை ஓவியங்கள் தோன்றியதற்கான காரணங்கள் யாவை?

    அக்கால மக்கள் தங்களது வாழ்வின் நிகழ்வுகளைப்
பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணியதால் ஓவியங்களை
வரைந்திருக்கலாம். அக்கால மக்கள் வேட்டையாடும்
தொழிலையே முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தனர்.
பல்வேறு மிருகங்களை வேட்டையாடுவதைப் போல
ஓவியங்களை வரைந்தால் வேட்டையாடும்போது அதிக
மிருகங்கள் கிடைக்கும்     என்ற நம்பிக்கையின்
அடிப்படையில் வரைந்திருக்கலாம். விலங்குகளைக்
கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறலாம் என்ற நம்பிக்கையின்
அடிப்படையிலும் அவற்றை வரைந்திருக்கலாம்.

முன்