தமிழகத்தில் பாறை ஓவியங்களில் விலங்கின ஓவியங்கள் பல
மான் ஓவியமானது செத்தவரை என்னுமிடத்தில் பக்கவாட்டுக்
செத்தவரை எனுமிடத்தில் மீன் உருவங்கள் நான்கு
பாறை ஓவியங்களில் சிறப்புடைய ஓவியமாக அமைவது குதிரை
போன்று வரையப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் நகருக்கு மேற்கே உள்ள வெள்ளருக்கம் பாளையம் என்னும் ஊரிலும் மூன்று இடங்களில் குதிரையின் வடிவம் காணப்படுகிறது. இதில் ஓரிடத்தில் குதிரையின் மீது மனிதன் அமர்ந்து ஈட்டியைக் கையில் பிடித்து வீசுவது போல் வரையப்பட்டுள்ளது. குறிபார்க்கும் இடம் புதர் நிறைந்தது போல் காட்டப்பட்டுள்ளதால் அப்புதரிடையே உள்ள விலங்கைத் தாக்குவதாகக் கொள்ளலாம். குதிரையின் மேல் அமர்ந்துள்ள மனிதனுடைய தலைப் பகுதியானது தலைப்பாகை போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. இது இனக் குழுத் தலைவனைச் சுட்டுவதாகக் கருதலாம். இவ்வோவியம் அடர் வண்ணக் கலவையில் வரையப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட மல்லபாடி ஓவியங்கள் சிறப்பானவையாகும். இரண்டு மனிதர்கள் குதிரைகளின் மேல் அமர்ந்து கொண்டு இடக் கையால் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு வலக் கையில் நீளமான கம்பு போன்ற ஒரு பொருளை வைத்துப் போரிடும் காட்சியாக அமைந்துள்ளது. இவ்வோவியமானது அடர் வண்ண அமைப்பில் காணப்படுகிறது. மகாராஜாக்கடை என்னுமிடத்தில் கிடைத்துள்ள ஓவியத்தில் மனிதன் ஒருவன் குதிரையின் மீது அமர்ந்துள்ளான். அவனது தலையைச் சுற்றி அரைவட்டக் கோடு காட்டப்பட்டுள்ளது.
வெள்ளருக்கம் பாளையம் என்னுமிடத்தில் யானை மீது |
|||||||
1.2.5 மாடு | |||||||
தேனி மாவட்டம் காமயக் கவுண்டன் பட்டியில் கிடைத்துள்ள ஓவியங்களில் குறிப்பிடத் தக்கது மாட்டின் ஓவியமாகும். இவ் ஓவியத்தில் மாட்டின் தலை கொம்புகளுடன் கழுத்துப் பகுதி வரை வரையப்பட்டுள்ளது. இவ்வோவியம் வெள்ளை நிறத்தில், அடர்த்தியான வண்ணப் பூச்சு முறையில் காணப்படுகிறது. |
|||||||
1.2.6 எக்ஸ்ரே ஓவியம் | |||||||
உடம்பின் உள் உறுப்புகளைக் காட்டுவது எக்ஸ்ரே படம் என்பதை அறிவீர்கள். எக்ஸ்ரே படம் போல வரையப்பட்ட ஓவியம் எக்ஸ்ரே ஓவியம் ஆகும். தமிழகத்தில் முதல் முதலாக ஆலம்பாடியில்தான் எக்ஸ்ரே ஓவியம் கிடைத்துள்ளது. இத்தகு ஓவியம் வெளிநாடுகளிலும் வட இந்தியாவிலும் கிடைத்துள்ளன. ஆலம்பாடி ஓவியத்தில் எருமை ஒன்றின் எலும்புகள் கோடுகளால் வரையப்பட்டுள்ளன. மேலும் எருமையானது சுற்று வரைகோட்டு முறையில் வரையப் பட்டுள்ளதால் எலும்புகள் தெரியும்படியாக அமைந்துள்ளது. வேட்டைத் தொழில் செய்து வாழ்ந்த அக்கால மக்கள் உணவுக்காக வேட்டையாடிய விலங்குகளை அறுத்தும். வெட்டியும், உடலின் உட்கூறுகளைக் கண்டறிந்தனர். எனவே விலங்கின் குடல் மற்றும் எலும்புகளை ஓவியத்தில் காட்டுவது அவர்களுக்கு எளிதான செயலானது. இத்தகு எக்ஸ்ரே ஓவியம் செத்தவரை ஓவியங்களிலும் இடம் பெற்றுள்ளது. |
|||||||
1.2.7 பிற விலங்கினங்கள் | |||||||
மேற்கண்ட ஓவியங்கள் தவிர இன்னும் பிற விலங்கினங்களின் உருவங்களைத் தமிழகப் பாறை ஓவியங்களில் காண முடிகிறது. நீலகிரி மாவட்டம் கொணவக்கரையில் ஆட்டின் வடிவம் அடர் வண்ணப் பூச்சு முறையில் வரையப்பட்டுள்ளது. சீகூர் எனுமிடத்தில் மயிலின் ஓவியம் கிடைத்துள்ளது. இவ் ஓவியமும் அடர் வண்ணப் பூச்சு முறையில் அமைந்துள்ளது. மல்ல சமுத்திரத்தில் வேட்டை நாய் ஒன்று தாவிய நிலையில் வரையப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் பன்றி, காட்டுப் பூனை, அன்னம் ஆகியவற்றின் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. |