தன்மதிப்பீடு : விடைகள் - I

(4) வழிபாடு மாறிவிட்ட குடைவரைகளைப் பற்றி எழுதுக.


திருப்பரங்குன்றம் குடைவரை சிவபெருமானுக்காக
அமைக்கப்பட்டதாக     இருப்பினும் முருகனுடைய
வழிபாட்டுக் கோயிலாகப் பிற்காலத்தில் மாறிவிட்டது.
பிள்ளையார் பட்டிக்     குடைவரை     சிவனுக்குரிய
குடைவரையாகும். இதில் கருவறையில் இன்றும்
சிவலிங்கம் உண்டு. முகமண்டபச் சுவரில் பிள்ளையாரது
புடைப்புச் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. காலப்
போக்கில் பிள்ளையாரது வழிபாடு மிகவே முகமண்டபம்
கருவறையானது. பாண்டிய நாட்டில் சிவனது இரு
குடைவரைகள் அவரது மக்களாகக் கருதப்படும்
முருகனுக்கும் கணபதிக்குமாக மாறிவிட்டன.

முன்