தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(3) | தஞ்சை ஓவியத்தில் இடம்பெறும் காட்சிகள் எவை? |
|
சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலாயத்தை அடையும் கயிலைக் காட்சி, சுந்தரமூர்த்தி நாயனாரைத் திருமணம் செய்துகொள்ள விடாமல் சிவபெருமான் தடுத்தாட்கொள்ளும் காட்சி, சேரமான் பெருமாள் நாயனார் தம் தேவியருடன் தில்லையில் நடராசனை வழிபடும் காட்சி, சிவபெருமான் திரிபுரங்களை எரிக்கும் காட்சி ஆகியவற்றுடன் இராசராசனுக்கு அவன் குருவான கருவூர்த் தேவர் ஏதோ விளக்குவது போன்ற காட்சி ஆகியன தஞ்சை ஓவியத்தில் உள்ளன. |