1.2. ஏழிசை

    பழந்தமிழ்ப் "பண்", இக்கால இந்திய இசையில் ‘இராகம்’
என்று சொல்லப்படுகிறது.

பண்களுக்கு உரிய இசை ஏழு. பழந்தமிழர் இவற்றைக் குரல்,
துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என அழைத்தனர்.
இவற்றை எப்படி இசைப்பது? ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும்
உயிர் நெட்டெழுத்து ஒலிகளால் இவற்றை இசைத்தனர்.

1.2.1 ஏழுசுரங்கள்

    தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த
ஏழு இசைகளைச் ‘சுரம்’ என்றனர். அவற்றின் பெயர்களும்
மாறின. எப்படி? ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம்,
பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று ஆயின. இவற்றைப்
பாடும்பொழுது முதலெழுத்துக்கள்     ஸ, ரி, க, ம, ப, த, நி
என்று பாடினர். (இவற்றின் முதலெழுத்துகளே ஸ, ரி, க, ம, ப,
த, நி என வடமொழி ஆயிற்று).

1.2.2 ஏழிசை சமஸ்கிருதத்தில் மாறிய முறை

    தமிழ்ப் பண்களின் ஏழு இசையின் பாடு ஒலியும் அது
சமஸ்கிருதத்தில் மாறிய முறையையும் இந்த அட்டவணையில்
பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

பண் இசைகள் இசைஒலி சமஸ்கிருத சுரம் இசைஒலி
குரல்

துத்தம்

கைக்கிளை

உழை

இளி

விளரி

தாரம்

ஒள

ஸட்ஜம்

ரிஷபம்

காந்தாரம்

மத்தியமம்

பஞ்சமம்

தைவதம்

நிஷாதம்

ரி

நி

1.2.3 ஏழிசையின் தனிச்சிறப்புகள்

    பாடும் பண்ணை நுகர்ந்து (சுவைத்து) அனுபவிக்கத்
தெரிந்திருந்தனர் பழந்தமிழர். ஆதலால் பண்ணின் ஏழு
இசைகளின் (சுரங்கள்) தனித்தனி மணம், சுவை, ஓசை, என
இனங்கண்டு பாடினர். இதோ பாருங்கள்! இந்த அட்டவணையை.

பண் இசை மணம் சுவை ஓசை
குரல்

துத்தம்

கைக்கிளை

உழை

இளி

விளரி

தாரம்

மௌவல்

முல்லை

கடம்பு

வஞ்சி

நெய்தல்

வீரை

புன்னை

பால்

தேன்

தயிர்

நெய்

ஏலம்

வாழை

தாடிமக்கனி

வண்டு

கிள்ளை

வாசி

யாவை

தவளை

தேனு

ஆடு

(மௌவல் = காட்டுமல்லிகை,     தாடிமக்கனி = பூமாதுளை,
வீரை
= ஒருவகை மரம், வாசி= அசுவினிப் பறவை, தேனு = பசு)

1.2.4 பண்களின் எண்ணிக்கை

    பண்கள் நூற்றுமூன்று எனக் கொண்டனர் பழந்தமிழர்.
நூற்றுமூன்று பண்கள் எவ்வாறு ஆயின?

பண்களுக்கு உரிய இசை, ஏழு அல்லவா?

சம்பூர்ண இராகம்

    குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
என்று ஆரோசையிலும், தாரம், விளரி, இளி,்உழை, கைக்கிளை,
துத்தம், குரல் என அமரோசையிலும் ஏழு இசையும்
அமைந்தால் அது "பண்" எனப்படும். (குறிப்பு : ஒலி அலகு
(Frequency) கூடிச் செல்வது ஆரோசை. குறைந்து வருவது
அமரோசை) கருநாடக இசையின் ஆரோகணம் அவரோகணம்
என்பது தான் ஆரோசை அமரோசை ஆகும். இவ்வாறு
ஆரோகண அவரோகணத்தில் ஏழு சுரங்களும் முறையே
அமைந்தால் கருநாடக இசையில் இது "சம்பூர்ண இராகம்"
எனப்படும்.

பண்ணியலும் திறமும்

    ஏழிசையில் ஆறு இசை கொண்டவை "பண்ணியல்"
எனப்படும். (கருநாடக இசையில் இது "ஷாடவ இராகம்"
எனப்படும்). ஏழிசையில் ஐந்திசை கொண்டது "திறம்" எனப்படும். (கருநாடக இசையில் இது "ஒளடவ" இராகம் எனப்படும்).

ஏழிசைகளையும் பழந்தமிழர் இவ்வாறு வகுத்துக் கொண்டனர்.
பின் அவற்றைப் பின்வருமாறு பகுத்துக் கொண்டனர்.

பண் வகைகள்
- (சம்பூர்ண இராகம்)
17
பண்ணியல்கள்
- (ஷாடவ இராகம்)
70
திறங்கள்
- (ஒளடவ இராகம்)
12
திறத்திறங்கள்
- (சுராந்தரம்)
04

மொத்தம்

103

பஞ்சமரபு நூலின் ஆசிரியர் அறிவனார் இந்த விளக்கத்தை
ஒரு வெண்பாவில் கீழ்வருமாறு தருகிறார்.

பண்ணோர் பதினேழாம்
பண்ணியல் பத்தேழாம்
எண்ணுந் திறமிரண்டும் பத்தென்ப
- நண்ணிய
நாலாந் திறத்திற மோர் நான்கு
முளப்படப்
பாலாய பண் நூற்று மூன்று.