தமிழ் நாடகம் பற்றிய
செய்திகளைச் சங்க காலம்
முதற்கொண்டு அறிகிறோம். தமிழ் நாடகத்தின்
பன்முக
வளர்ச்சியின் தொடர்ச்சியாக அவை அமைந்துள்ளன. பத்தாம்
நூற்றாண்டில் தமிழகத்தில் மன்னர்களின்
ஆதரவோடு
நாடகக்கலை வளர்ச்சி பெற்றது. எனினும் தொடர்ந்து தமிழகத்தில்
தோன்றிய பல்வேறு கலவரச் சூழல்கள் இலக்கிய வடிவங்களின்
தோற்றத்தினை முக்கியப்படுத்தின. வாய்மொழி இலக்கியங்களும்,
சிற்றிலக்கிய வடிவங்களும் மக்களிடையே செல்வாக்குப் பெறத்
தொடங்கின. தமிழ் நாடகமும்
அவற்றோடு இயைந்து
வடிவமாற்றம் பெறத் தொடங்கியது. அதன் வெளிப்பாடாகத்
தமிழ் நாடகம் ‘சிற்றிலக்கிய நாடகங்கள்’ என்னும் வடிவமைப்பில்
செயல்படத் தொடங்கியது. இவ்வகையில் தோற்றம்
பெற்ற
நொண்டி, கீர்த்தனை, பள்ளு மற்றும் குறவஞ்சி ஆகிய நாடக
வடிவங்கள் பற்றிய செய்திகளை இப்பாடப் பகுதியில் பார்ப்போம். |