5.0 பாட முன்னுரை

தமிழ் நாடகம் சங்கரதாசு சுவாமிகள், சம்பந்த முதலியார்
போன்ற சான்றோரால் புதுப்பொலிவு பெறத் தொடங்கியதை
முன்னர்க் கண்டோம். இப்புது முயற்சி அடுத்த கட்டத் தமிழ்
நாடக வளர்ச்சி நன்கு அமைய உதவியது. பல நாடகக்
குழுக்களும், பல நடிகர்களும் (கலைஞர்களும்) பல நாடகங்களும்
தமிழில் புதிதாக உருவாகத் தொடங்கின. நாடகப் படைப்பு
நிலையில் சோதனை முயற்சிகளுக்கும் இவை வித்திட்டன.
இவ்வகையில் தமிழ் நாடகத்துறை மறுமலர்ச்சி பெற்று வளர்ந்த
நிலையை இங்கே காண்போம்.