பல்வகைச் சுவைகளையும் தன்னகத்தே கொண்டு,
சூழலுக்கேற்ப அவற்றை வெளிப்படுத்துவதே நாடகக் கலையின்
தனித்தன்மை வாய்ந்த கூறு எனலாம். எனினும் இவற்றுள்
ஒன்றோ பலவோ ஒரு நாடகத்தில் இடம் பெற்று வரினும்
ஏதேனும், ஒரு சுவை மேம்பட்டு நிற்குமாறு அமைவதுண்டு,
இச்சுவையின் செல்வாக்குச் சிறப்புற அமைவதால் இதன்
பெயர்கொண்டே இவ்வகை நாடகம் அறியப்படுவது இயல்பான
ஒன்று தானே!
பொதுவாகச் சுவைகள் ஒன்பது என்றாலும், நாடகத்தில்
அதிகமாகப் பயின்றுவரும் மென்சுவை நகைச்சுவை ஆகும். தமிழ்
நாடகமும் இதில் விதிவிலக்கல்ல. இத்தன்மைத்தான பல
நாடகங்கள் தமிழில் தோற்றம் பெற்றுள்ளன. இவ்வகையில்
நகைச்சுவை, எள்ளல், அங்கதம், மற்றும் கிண்டல் ஆகிய
சுவையுணர்வு நாடகங்களின் பிரிவுகளை இங்கே காணலாம்..
நகைப்பை வரவழைக்கும் வண்ணம் காட்சிச் சித்திரிப்புடன்
விளங்கும் நாடகவகை இஃது, இதுவே நகைச்சுவை (humour)
நாடகம் எனப்படுகிறது.
இவ்வகை நாடகங்கள் இயல்பான நிகழ்வுகளைக் கொண்டு
படைக்கப்பட்டிருக்கும். மேலும் கற்பனை
கலந்து இன்பமான
முடிவினைக் கொண்டு விளங்குமாறு இது அமையும்.
சுருங்கக்கூறின், துன்பியல் நாடகத்திற்கு
எதிரான குணநலன்களை
நகைச்சுவை நாடகம் கொண்டு விளங்குவதை நாம் காணலாம்.
தமிழில் பல நாடகங்கள் நகைச்சுவை நாடகங்களாகப்
படைக்கப்பெற்றுள்ளன. சம்பந்தமுதலியாரின் ‘மெய்க்காதல்',
‘பேயல்ல பெண்மையே', திருச்சி பாரதனின் ‘கண்ணின்
கடைப்பார்வை' போன்றன குறிப்பிடத்தக்க நகைச்சுவை
நாடகங்களாகும்.
‘கண்ணின் கடைப்பார்வை' நாடகக் காட்சியில் நகையுணர்வு
இழையோடுவதை இங்கே காண்போம்.
தங்கம் : |
சரி! நம்ம காதலைப்பற்றி உங்க அம்மா கிட்டே
சொன்னீங்களா? |
அறிவழகன் : |
அதுக்குத் தைரியத்தை வரவழைக்க வேணாமா? |
தங்கம் : |
கடவுளே! தைரியம் எப்ப வரும்? |
அறிவழகன் : |
கொஞ்சம். . கொஞ்சமாத்தானே வரும். |
தங்கம் : |
போச்சுடா! அதுக்குள்ளே நான் கிழவி
ஆயிடுவேன்! |
(கண்ணின் கடைப்பார்வை, காட்சி - 1) |
தரம் தாழ்ந்த நகையுணர்வினை வெளிப்படுத்தும் நாடக வகை
இஃது. பிறரைக் கேலி செய்யும் வண்ணம் இது அமைந்து வரும்.
மனித வாழ்வின் தவறான பக்கத்தினை இது பிரதிபலிப்பதாய்
அமைவதுண்டு. இவை எள்ளல் (farce) நாடக வகையாகும்.
தமிழில் இவ்வகை நாடகங்கள் வலிந்து சிரிப்பையூட்டும்
வண்ணம் படைக்கப்பட்டுள்ளன. தரக்குறைவான இரு பொருள்
படும்படியான உரையாடல்களும் இவ்வகை நாடகங்களில் இடம்
பெறுவதைக் காண இயலும். முன்னோடியாக, பம்மல் சம்பந்த
முதலியாரைக் குறிப்பிடலாம். சதிசக்தி, வைகுந்த வாத்தியார்,
சங்கீதப் பைத்தியம் போன்றவை அன்னாரின் குறிப்பிடத்தக்க
எள்ளல் நாடகங்களாகும்.
‘எள்ளல்‘ சுவை அறிய ‘சதிசக்தி' நாடகக் காட்சியைக்
காண்போம்.
நாகக்கோனி அம்மாள் : அடே எம்புருசா - எம் புருசா!
பொழுது வெடிஞ்சி எத்தினி நாழி ஆச்சி, இன்னும்
தூங்கரதப்பாரு! கொரட்டெ விடுறதும் காததூரம் கேக்குது. இந்தப்
புருசனை என் தலையிலே கட்டனாங்களே, இந்தச் சோம்பேரிக்கு,
சாப்பாடு போட, எங்கம்மா வூடு போட்ட நகையெல்லாம்
ஒண்ணொண்ணா வித்தாச்சி. வவுத்தைப்பாரு வண்ணான் சாலே
போல! இதா- எழுந்திரு - எழுந்திருண்ணா (தட்டி எழுப்புகிறாள்)
கருடக்கோனான் : (கண்ணை மூடிக்கொண்டே) தா. . . நானு
தூங்கறேன். எழுப்பாதே (குறட்டை விடுகிறான்)
நாகக்கோனி அம்மாள் : நல்ல தூக்கம்தான்! தூக்கத்திலே
பேசரதுக்கு மாத்திரம் தெரியுதோ? எழுந்திரு. . எழுந்திரு. .
சோம்பேறி. . பொழுது விடிஞ்சி பத்து நாழியாச்சே (தட்டுகிறாள்)
(சதிசக்தி, : காட்சி :1)
புன்முறுவல் பூக்கச் செய்யும் மெல்லிய நகைப்பினை
வெளிப்படுத்துவதோடு, மனிதத் தவறுகளை மறைமுகமாக
வெளிப்படுத்துவது இவ்வகை நாடகமாகும். இதனை அங்கதம்
(satire) எனலாம்.
மேலும், மனிதத் தவறுகளையும், சமூக அவலங்களையும்
நகைச்சுவை உணர்வுடன் வெளிக்கொணர்வதோடு, உரியவர்
திருந்திட வழிசெய்யும் ஊடகமாகவும் இவ்வகை நாடகம்
விளங்குவதை நாம் காணலாம்.
ஆழ்ந்த கூர்ந்து நோக்கலின் அடிப்படையில் இவ்வகை
நாடகம் அமைவதால் பார்வையாளரிடையே
இது பெரும்
வரவேற்பைப் பெறுகிறது.
நடைமுறை வாழ்க்கையை ஒட்டிய பிரச்சினைகளே அங்கத
நாடகத்தின் கருவாகவும், கதைப்பின்னலாகவும் அமைந்து
விடுகின்றன. எனவே அன்றாடம் கண்டும் கேட்டும் உள்ள
நிகழ்வுகள் பார்வையாளருக்கு நகைப்பை ஊட்டுவதோடு மறு
சிந்தனையையும் தோற்றுவிக்கின்றன.
சம்பந்த முதலியாரின் ‘சபாபதி', சோவின் ‘சம்பவாமி
யுகே-கே', ‘யாருக்கும் வெட்கமில்லை' போன்றன அங்கத
நாடகங்களாகும்.
‘சபாபதி' நாடகச் சுவையினை இங்கே காண்போம்.
சபாபதி முதலியார் : |
உங்களுக்கு சரியா படிக்கத் தெரியலே
வாத்தியார் - நான் படிக்கிறேன்
பாருங்க. (படிக்கிறான்) |
|
“சௌத் இந்தியன் ரெயில்வே.,
மட்ராசிலிருந்து புறப்பட்டு குப், குப்,
குப், குப்... |
சின்னசாமி முதலியார்: : |
அப்பேன், என்னாப்பேன் இந்த குப்,
குப்? |
சபாபதி முதலியார் : |
பொகை போறது! |
சின்னசாமி முதலியார்: |
ஓ எவ்வளவு தூரம் போறது? |
சபாபதி முதலியார் : |
செங்கல்பட்டு வரைக்கும். |
சின்னசாமி முதலியார்: |
என்னா! இந்த குப் குப்.. செங்கல்பட்டு |
சபாபதி முதலியார் : |
இல்லாப் போனா ரெயில் நின்னுப்
பூடாதா? |
(சபாபதி, காட்சி
:1) |
அங்கத நாடக வகையையொட்டியே அமையும் நாடகவகை
இது. எனினும் உரையாடல் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒரு பொருளை அல்லது ஒர் அமைப்புக் கூறினைக் கிண்டல்
செய்யும் வண்ணம் அமைவதால் இது கிண்டல் (burlesque)
எனப்படுகிறது.
தமிழில் இவ்வகையில் பல நாடகங்கள் உள்ளன. ‘நந்தனாரை‘
மாற்றிக் ‘கிந்தனார்‘ என்று படைத்தளித்த தன்மையும்,
‘இராமாயணத்தை‘ மாற்றிக் ‘கீமாயணம்‘ என்று
படைத்தளித்தமையும் இவ்வகைக்கு உரியது ஆகும். இது
போன்றே ‘அரிச்சந்திரன்‘ என்பது பம்மல் சம்பந்த முதலியாரால்
‘சந்திரகரி‘ என்று மாற்றி நாடகமாக்கம் செய்யப் பெற்றது.
‘சந்திரகரி‘ நாடகக் காட்சியைக் காண்போம்.
பாகுவீரன் : |
ஏயப்பா, இந்த ஆள் பேரு என்னாயப்பா? |
சந்திரஹரி : |
சந்திரஹரி. |
பாகுவீரன் : |
சந்துலெ அடியா? யெப்பா! ஒண்டி சண்டியா
யிருந்தா என்னெயெ அப்புறம் சந்துலெ
அடிக்கவா? - அந்த பேர் வேணாயப்பா. |
சந்திரஹரி : |
உன் இஷ்டம்! வேறு என்ன பெயர்
வேண்டுமானாலும் வைத்துக் கொள் - உன்
அடிமை. |
பாகுவீரன் : |
ஆனா யப்பா, சந்தா சந்தா இண்ணு
கூப்படறேன். . வாடாப்பா - சந்தா. |
|
(சந்திரகரி, காட்சி -1) |
|