பாடம் 4
C02134 : படர்க்கை வினைமுற்றுகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
படர்க்கை வினைமுற்று பற்றி விளக்குகிறது. படர்க்கை வினைமுற்றுகளில் இருதிணை ஐம்பாலுக்குத் தனித்தனி விகுதிகள் உள்ளன என்கிறது. தெரிநிலை வினைமுற்று, குறிப்புவினை முற்று ஆகிய இரண்டு வகைகளும் பெரும்பாலும் பொதுவான வினைமுற்று விகுதிகளையே பெற்றுள்ளமையைத் தெரிவிக்கிறது. பலவின்பால் வினைமுற்று விகுதி ‘ஆ’ என்பது எதிர்மறைப் பொருளில் வருவதை உணர்த்துகிறது.
| |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
- அன், ஆன் என்பன படர்க்கை ஆண்பால் வினைமுற்று
விகுதிகள் என அறியலாம்.
- அள், ஆள் என்பன பெண்பால் வினைமுற்று விகுதிகள்
எனத் தெரிந்து கொள்ளலாம்.
- அர், ஆர் என்பனவும் ப, மார் ஆகியனவும் பலர்பால்
படர்க்கை வினைமுற்று விகுதிகள் என உணரலாம்.
- து, று, டு ஆகியன ஒன்றன்பால் படர்க்கை வினைமுற்று
விகுதிகள் எனத் தெளியலாம்.
- அ.ஆ ஆகியன பலவின்பால் படர்க்கை வினைமுற்று
விகுதிகள் என்று அறியலாம்.
| |
|