3.5 தொகுப்புரை

நல்லியக்கோடனிடம் பரிசு பெற்று வந்த சிறுபாணன் பரிசு பெற
விரும்பும் சிறுபாணனிடம் நல்லியக்கோடனின் கொடைச் சிறப்பை
வியந்து கூறுகிறான். அவனது கொடைத்திறம் சேர, சோழ,
பாண்டியர்களின் கொடையைக் காட்டிலும் மலோனது; கடையெழு
வள்ளல்களின் அருங்கொடையை விட உயர்ந்தது என்று மகிழ்ந்து
கூறுகிறான்.

"உன்னைப் போல் நானும் வறுமையில் வாடினேன்; செய்வது
தெரியாமல் விழித்தேன். நல்லியக்கோடனிடம் சென்று பரிசு
பெற்றமையால் என் வறுமைத் துன்பம் முற்றிலும் நீங்கியது. எனவே,
நீயும் அவ்வள்ளலிடம் சென்று பரிசு பெற்று, துயர் நீங்குவாயாக"
என்று பரிசு பெற்ற பாணன் வறுமையில் வாடும் பாணனை
வழிப்படுத்துகிறான்.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

சோழ நாடு எதனை உடைத்து?

விடை

2.

கடையெழு வள்ளல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை

3.

முல்லைக்குத் தேர் ஈந்தவன் யார்?

விடை

4.

மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் யார்?

விடை
5.

நெல்லிக்கனி கொடுத்த வள்ளல் யார்? யாருக்குக் கொடுத்தான்?

விடை

6.

ஓரியின் குதிரை எவ்வாறு அழைக்கப்பட்டது?

விடை