தன் மதிப்பீடு - I : விடைகள்

5.

உமணர்களின் வாழ்க்கை முறை பற்றி எழுதுக.

உப்பு வணிகர் உமணர். இவர்கள் உப்பு மூட்டைகளை
வண்டிகளில் ஏற்றி ஊர்கள் தோறும் சென்று விற்பர்.
அப்பொழுது தம் மனைவி மக்களையும் உடன் அழைத்துச்
செல்வர். அதுமட்டுமன்றித் தம் குழந்தைகளைப் போல
வளர்த்த மந்தியையும் உடன் அழைத்துச் செல்வது
உண்டு.     அம்மந்தியை ஆடை, அணிகலன்கள்
முதலியவற்றை அணிவித்து அலங்காரம் செய்து தம்முடன்
அழைத்துச் செல்வர்.

அம்மந்திகள்     அவர்தம்     குடும்பத்தினருடனும்
குழந்தைகளுடனும் முத்துகள் பெய்த கிளிஞ்சல்
சிப்பிகளைக் கொண்டு கிலுகிலுப்பை (விளையாட்டுப்
பொருள்) ஆட்டி மகிழும்.

முன்