தன் மதிப்பீடு - II : விடைகள்

3.

மெய்ப்பாடு என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

இது அகப்பாட்டு உறுப்புகளில் ஒன்பதாவதாக
இடம் பெறுவது. மெய்ப்பாடு என்னும் சொல்லுக்குப்
பொருட்பாடு, வெளிப்பாடு, புலப்பாடு எனப் பல
விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. மெய் என்பது
உடலைக் குறிக்கும்.

உள்ளத்து உணர்வுகள் பேச்சில் வெளிப்படுவதன்
முன்பாக உடலில் புலப்படுவது உண்டு. பேச்சே
இல்லாமல் உடல் வழியான புலப்பாட்டில் மட்டுமே
கருத்துகளை உணர்த்தமுடியும். இதையே ‘மெய்ப்பாடு’
என்று வகுத்தனர்.

இம் மெய்ப்பாடு நகை, அழுகை, இளிவரல்
(இழிவு), மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம்
(வீரம்), உவகை, வெகுளி (கோபம்) என்று எட்டு
வகைப்படும். இவ் எட்டு உணர்ச்சிகளையும் உடல்
வழியாகவே உணர்த்துதல் மெய்ப்பாடு ஆகிறது. இம்
மெய்ப்பாடு அகப்பாடல்களில் கூற்று நிகழ்த்தும்
தலைமக்களுக்குப் பெரிதும் பயன்தருவது.

முன்