நாற்கவிராச
நம்பி இயற்றிய நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலின்
இறுதி
இயல் ஒழிபியல் ஆகும். முன்னர்
அமைந்த அகத்திணை இயல், களவியல் , கற்பியல், வரைவியல்
என்னும் நான்கு இயல்களிலும்
சொல்லப்படாமல்
விட்டுப்போன
செய்திகளைக் கூறுவதே ஒழிபியல்
என்பதை முந்தைய பாடத்தின்
மூலம் அறிந்து கொண்டோம். |
ஒழிபியலில் இடம் பெற்ற
பிற செய்திகளான அகப்பாட்டினுள் வரும் உவமைப் பொருள் -
இறைச்சிப் பொருள் என்னும் இருவகைப்
பொருள்கள்,
அகப்புறக் கைக்கிளை, அகப்பொருட்
பெருந்திணை,
அகப்புறப் பெருந்திணை, அகப்பாடல்களில்
பாடப்படுவோர், வழுவும்
அமைதியும் முதலான செய்திகளை இப்பாடத்தில் காணலாம். |