1.0 பாட முன்னுரை |
'அணி' எனும் சொல்லுக்கு
அழகு என்பது பொருள்.புலவன் செய்யுளில் தான் கூறவந்த கருத்தை அழகுறச்சொல்வதற்காகப்
பயன்படுத்தும் உத்திமுறைகள் 'அணி' எனப்படுகிறது. இவ்வணிகளுள் தலைமையான
சிறப்புடையதுஉவமை அணி. தொல்காப்பியர் 'உவமை இயல்' எனும்பகுதியில் உவமை
அணியின் இலக்கணத்தைக் கூறியுள்ளார்.பல்வேறு அணிகள் உவமை அணியிலிருந்து
தோன்றியவை; அல்லது உவமை அணியின் சாயல் உடையவை. பிற்காலவளர்ச்சியை, பல்வேறு
அணிகளின் இலக்கண விரிவைத்தமிழில் கொணர வேண்டும் எனும் நோக்கத்துடன் தமிழில்அணி
இலக்கண நூல்கள் தோன்றின. அவற்றுள் ஒரு நூல்தண்டியலங்காரம். இதன் ஆசிரியர்
தண்டி. தண்டியலங்காரம் பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும்அணிகள் முப்பத்தைந்து. இவற்றில் முதற்கண் கூறப்படும் தன்மைஅணி, உவமை அணி, உருவக அணி, தீவக அணி ஆகிய நான்கும் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன. ஒவ்வோர்அணியைப் பற்றியும் தண்டியாசிரியர் கூறும் போது முதற்கண்அதன் இலக்கணத்தைக் கூறுகிறார். அவ்வணியானதுபல்வகைப்பட்டு அமையுமாயின் அவ்வகைகளையும் கூறுகிறார்.தண்டியலங்கார உரையில் ஒவ்வொரு வகைக்கும் தெளிவானவிளக்கம் தரப்படுகிறது; ஒவ்வொரு வகைக்கும் பொருத்தமான பாடல் சான்று காட்டப்படுகிறது; அப்பாடலுக்குப் பொருள் தரப்படுகின்றது; அணிப் பொருத்தம் ஆங்காங்கே சுட்டிக் கூறப்படுகிறது. இந்நெறி முறையில் இப்பாடத்தில் ஒவ்வோர்அணியையும் பற்றிய கருத்துகள் இடம் பெறுகின்றன. |