5.5 தொகுப்புரை

     சிற்றிலக்கிய வகைமை - ஓர் அறிமுகம் எனும் பாடம் உங்களுக்குச் சிற்றிலக்கியத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

     சிற்றிலக்கியம் என்றால் என்ன, பேரிலக்கியம் என்றால் என்ன என,    இரண்டுக்குமான     வேறுபாடுகளைத் தெளிவுபடுத்தியிருக்கிறது.

     பிரபந்தம் என்ற வடமொழிச் சொல்லிற்கும் சிற்றிலக்கியம் எனும் தமிழ்ச் சொல்லுக்குமான தொடர்பு. பல்வேறு புலவர்களின் நோக்கில் பிரபந்தங்களின் எண்ணிக்கை, பாட்டியல் நூல்களில்எண் வரையறை, வீரமாமுனிவரின் சதுரகராதி கூறும் 96 சிற்றிலக்கிய வகைமை, அதில் விடுபட்ட சிற்றிலக்கியங்களின் பட்டியல் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் தோன்றிய வரலாறு, சிற்றிலக்கியங்களின் பொது அமைப்பு முறை சிற்றிலக்கியக் காலம் பற்றித் தமிழண்ணல் கருத்து, சிற்றிலக்கியத்தைப்  பயில்வதால் ஏற்படும் பயன் போன்ற கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இதன் மூலம் சிற்றிலக்கியங்கள் பயில ஆர்வம் ஏற்படும்.


     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
பத்துப்பாட்டில் அமையும் ஆற்றுப்படை நூல்களில் இரண்டைக் கூறுக.
2.
பிரபந்தம் என்பதைத் தமிழில் எவ்வாறு குறிப்பிடுகிறார்கள்?
3.
எந்த மன்னர்களின் காலத்தைத் தமிழ்ச்  சிற்றிலக்கியக்காலம் என அழைக்கலாம்?
4.
புகழ்மிக்க சிற்றிலக்கிய வகைகள் ஐந்தைக் கூறுக.
5.
வீரமாமுனிவரின் சதுரகராதியும், பொருட் தொகை நிகண்டும் காட்டும் சிற்றிலக்கியங்கள் எத்தனை?