|
தமிழர்கள் ஆடற்கலையில் வல்லவர்களாகத்
திகழ்ந்துள்ளனர். ஆடற்கலையின் பல்வேறு நுட்பங்களையும்
நூல்கள் வாயிலாகவும், உரை
வாயிலாகவும்
வெளிப்படுத்தியுள்ள நிலைகளை இப்பாடம் நினைவூட்டுகிறது.
ஆடலுக்குரிய அடிப்படைப் பயிற்சி முறைகளையும்,
ஆடும் முறைகளையும் நன்கு அறிந்து இருந்தனர் தமிழர்.
ஆலயச் சிற்பங்கள் இவ்வகை நிலைகளை வெளி உலகிற்கு
எடுத்துக்காட்டுகின்றன. இவற்றை மாணவர்களுக்கு
இப்பாடம் அறிமுகப்படுத்துகிறது.
ஆடலின் மூலம் வெளிப்படும்
மெய்ப்பாடும் ஒரு வகை
மொழியே. முத்திரைகள் மூலமும் தலை,
கழுத்து, அடி
நிலைகள் மூலமும் பொருள் விளக்கும் நிலைகளை இப்பாடம்
தெரிவிக்கிறது. |