|
மனிதனின்
மகிழ்ச்சி வெளிப்பாடு ஆடற்கலையாகும்.
துள்ளி விளையாடிய ஆடற்கலை மண்ணின் மணம் கமழும்
நாட்டுப்புறக் கலையாக உருவெடுத்தது. இலக்கண
வரம்பிற்குட்படுத்தப்பட்ட பொழுது செவ்வியல் கலையாயிற்று
என்ற நிலைகளை இந்தப் பாடம் உணர்த்துகிறது.
நாட்டுப்புற ஆடல்கள் இறை வழிபாட்டுக் கலையாகத்
தோன்றி, பின்பு மகிழ்வுறு கலையாக வளர்ந்த நிலைகளைத்
தெளிவுபடுத்துகிறது.
நாட்டுப்புறம் தந்த ஆடல் வகைகள் இன்றும்
நாட்டுப்புற மக்களால் போற்றப்பட்டு வருவதனை இந்தப்
பாடம் விளக்குகிறது. |