பாடம் 1

D07111 : இலக்கியத் திறனாய்வு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    திறனாய்வு என்றால் என்ன என்பதனை முதலில் அறிமுகம் செய்கிறது. அதனைப்பற்றிய ஒரு பொதுவான விளக்கத்தைத் தருகிறது.     பின்னால் வரப்போகிற விரிவான விளக்கங்களுக்கு இந்தப் பாடம் ஒரு நுழைவாயிலாக இருக்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
திறனாய்வு என்பதனோடு நீங்கள் உங்களை அறிமுகம்செய்து கொள்ளலாம்.
இலக்கியம் - அதனைப் படிக்கிறவர் (வாசகர்), அதனைத் திறனாய்கிறவர் என்ற முக்கூட்டின் உறவுகளை அறிந்து கொள்ளலாம்.
திறனாய்வின் அடிப்படையிலான வரையறை இன்னது என்று தெரிந்து கொள்ளலாம்.