பாடம் 3

D07113 : இலக்கியமும் வாழ்க்கையும்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இலக்கியம் பற்றிய திறனாய்வு, இலக்கியத்தின் உட்பொருளாகிய வாழ்க்கை பற்றி ஆராய்ந்து சொல்லுவது ஆகும். இதன் அடிப்படையில் இலக்கியம் கூறும் வாழ்க்கை பற்றியும், வாழ்க்கை எவ்வாறு இலக்கியத்தில் இடம் பெறக்கூடும் என்பது பற்றியும் சொல்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இலக்கியம் சொல்லும் வாழ்க்கையை அறிய முடிகிறது.
அந்த வாழ்க்கை எவ்வாறு, என்ன என்ன கோணங்களில் இலக்கியத்தில் சித்திரமாகியுள்ளது என்பது பற்றி அறிய முடிகிறது.
திறனாய்வுக்குரிய தேடுபொருளை இத்தகையது என்று அறிந்து கொள்ளலாம்.
வாழ்க்கை, இலக்கியத்தின் உள்ளடக்கம். அது எத்தகையது என்பதை அறிய முடிகிறது.