|
மதுரையை ஆண்ட நாயக்க
மன்னர்களுள் பேரும் புகழும்
பெற்று விளங்கியவர் திருமலை நாயக்க
மன்னர். திருமலை
நாயக்க மன்னரின் மறைவு குறித்துப்
பல்வேறு கருத்துகள்
கூறப்படுகின்றன. இக்கருத்தைக்
கருவாகக் கொண்டு
புனையப்பட்ட வரலாற்றுச் சிறுகதைதான்
திருமலை கண்ட
திவ்யஜோதி.
மதுரை மீனாட்சி அம்மன்
கோவில் பட்டாச்சாரியார் மகள்
சுந்தரவல்லியின் காதலைத் திருமலை
மன்னன் பெற்றான்.
கருவுற்ற மங்கை அவமானம் தாங்காமல் நஞ்சுண்டு
மடிந்தாள்.
மகள் மாரடைப்பால் இறந்தாள் என்று
வெளியில் கூறினாலும்
உள்ளுக்குள் பட்டாச்சாரியார்
மனம் மன்னனைப்
பழிவாங்கத் துடித்தது. மன்னனின்
தயவால் கிறித்துவ மதம்
பரவுவதைக் கண்டு சினம் கொண்ட
சிலருடன் சேர்ந்தார்.
பொருள் நெருக்கடியால் மன்னன் இடர்ப்பட்டுக்
கொண்டிருந்த
சூழ்நிலையைப் பயன்படுத்திக்
கொண்டு அவனைப் பழி
வாங்கினார். பக்திப் பரவசத்தில் மன்னர்
ஜோதியில் கலந்து
விட்டார் என்று செய்தி பரப்பப்பட்டது
என்பதைக் கூறும்
கதைதான் திவ்யஜோதி.
|